
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, சிந்தூர் ஆபரேஷன் செயல் படுத்தப்பட்டு, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் தற்போது திடீர் திருப்பமாக அமெரிக்க பிரதமரான டொனால்ட் டிரம்ப், தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழு மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பொது அறிவையும் சிறந்த நுண்ணறிவையும் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து பாகிஸ்தானின் துணை பிரதமர் இஷாக் தார் “இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் அளிக்கிறோம்” என போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி “இருநாடுகளும் போர்களை நிறுத்திக்கொள்கிறது. இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இனிமேல் எந்த தாக்குதல்களும் இருநாடுகள் தரப்பிலும் மேற்கொள்ளப்படாது”.என்று முப்படை சார்பாக விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வருகின்ற 12 தேதி இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி இருநாட்டு மக்களுக்கு இடையையும் ஒரு பாதுகாப்பையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்