சாட் ஜிபிடி- யை பின்னுக்கு தள்ளிய இந்தியன் ஆயில் ஒன் ஆப்! காரணம் தான் ஹைலைட்..

பிலே ஸ்டோர் தரவரிசையில் 4.4 பெற்று ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது..
சாட் ஜிபிடி- யை பின்னுக்கு தள்ளிய இந்தியன் ஆயில் ஒன் ஆப்! காரணம் தான் ஹைலைட்..
Published on
Updated on
1 min read

இந்தியாவில் அதிக பதிவிறக்கம் செய்யபட்ட செயலிகள் பட்டியலில் சாட் ஜிபிடி- யை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியன் ஆயில் ஒன்னு ஆப். வளைகுடா நாடுகளில் தொடரும் போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கண்டனத்தை வாரங்களில் சிலிண்டர் பற்ற குறை குறித்த செய்திகள் மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெரும்பாலானோர் ஆன்லைன் புக்கிங் போர்ட்டலில் முன்பதிவிற்காக குவிந்ததால் இணையதளம் முடங்கும் நிலைக்கு சென்றது. அதனையடுத்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புக்கிங் செயலியை பதிவிறக்கம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பிலே ஸ்டோர் தரவரிசையில் 4.4 பெற்று ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது.

முன்னதாக ஆன்லைன் அல்லது கால் செய்து முன்பதிவு செய்யப்பட்ட  LPG சிலிண்டர், விநியோகம் செய்யும் டீலர்களின் மூலம் பெறப்பட்டது. இந்த எரிவாயு தட்டுப்பாட்டு செய்தியால் அலுவலகத்திற்கு குவிந்த மக்களை சமாளிக்க முடியாத நிலை உருவானது. இணையதளம் மூலம் புக்கிங் செய்யும் முறையும் அதிக பயனாளர்கள் குவிந்ததால் முடங்கியது. மேலும் முன் பதிவு செய்பவர்களுக்கு “சர்வர் டவுன்” எனும் அலெர்ட் மெசேஜ் வருவதாக தெரிவித்தனர். இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சஷி காந்த் சர்மா “எப்போதும் இல்லாத அளவுக்கு முன்பதிவுகள் 10 மடங்கு அதிகரித்துள்ளது” எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மக்களுக்கு இந்தியன் ஆயில் ஒன் ஆப் பற்றி விநியோகஸ்தர்கள் மூலமாகவும் சமூக வலைத்தளம் மூலமாகவும்  தெரியப்படுத்தப்பட்டது. பிறகு முன்பதிவு செய்ய இந்தியன் ஆயில் ஒன் ஆப் பிலே ஸ்டோர் பதிவிறக்கம் அதிகமானது. இந்த செயலி ChatGPT-ஐ முந்தி இரண்டு இலவச செயலி தரவரிசைகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் 33.4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் LPG சிலிண்டர் இணைப்புகள் இருந்தாலும், PNG இணைப்புகள் உள்ள வீடுகளின் எண்ணிக்கை சுமார் 1.5 கோடி ஆகும். வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான முன்பதிவு பீதியால் சில ஆன்லைன் முன்பதிவு தளங்கள் 'செயலிழக்க' காரணமாகியுள்ளன. உதாரணமாக, பஞ்சாபில், இயல்பை விட கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் வரை முன்பதிவுகள் அதிகரித்ததால், உள்ளூர் ஆன்லைன் முன்பதிவு முறை செயல்படுவதை நிறுத்தியது, இதனால் புதிய முன்பதிவுகள் செயல்படுத்தப்படுவதைத் தடுத்தது.

உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோக இடங்களில் ஒன்றான ஈரானில் தொடரும் போரினால் ஹார்முஸ் ஜலசந்தி தடைப்பட்டதையடுத்து , வர்த்தகத்தில் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி பாதிப்பால் இந்திய நுகர்வோர் தத்தளித்து வருகிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com