"ஆரா 10/10" - வைரல் வீடியோவால் சிறுவனுக்கு அடித்த 'ஜாக்பாட்'! ஹோண்டா உரிமையாளர் செய்த காரியத்தால்.. இணையத்தில் குவியும் பாராட்டுகள்

ஹோண்டா டீலர்ஷிப் உரிமையாளர் திலீப் போபடே பாட்டீல், அந்த சிறுவனின் கே.ஜி-1 முதல் பட்டப்படிப்பு வரை கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
Aura Kid viral video
Aura Kid viral video
Published on: 
Updated on: 
1 min read

கடந்த சில நாட்காளாக 'ஆரா கிட்' என்ற புனைபெயரில் ஸ்டைலிஷ்- ஷான ஒரு சிறுவன் இணையத்தில் டிரெண்ட்-டானதை அடுத்து தற்போது அந்த குழந்தைக்கு பள்ளி படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக சாய் பாயிண்ட் ஹோண்டாவின் உரிமையாளரான திலீப் போபடே பாட்டீல் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது அனைவரையும் ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன், அவரது குடும்பத்தினர் வாங்கிய ஒரு புதிய ஸ்கூட்டருக்கு முன்னால் நின்று ஸ்டைலாக போஸ் கொடுத்த வீடியோ ஒன்று 137 மில்லியன் பார்வைகளை கடந்தும் சென்றது. இந்த வைரல் வீடியோதான் தற்போது அந்த சிறுவனுக்கு ஆன்லைன் பிரபலத்தை விட மிகவும் முக்கியமான ஒன்றை தேடி கொடுத்துள்ளது. அதுதான், ஹோண்டா டீலர்ஷிப் உரிமையாளர் திலீப் போபடே பாட்டீல், அந்த சிறுவனின் கே.ஜி-1 முதல் பட்டப்படிப்பு வரை கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் யவத்மாலில் வசிக்கும் ருத்ரன்ஷ் சிங் தாக்கூர் (சிறுவன்), தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரியுடன் கடந்த நவம்பர் 9 அன்று தங்களது புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரைப் பெறுவதற்காக ஹோண்டா ஷோரூமிற்குச் சென்றுள்ளனர். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு முன்னாள் கருப்பு கண்ணாடி அணிந்து, பேண்ட் பாக்கெட்-டிற்குள் ஸ்டைலாக கைகளை விட்டபடி கூல்லாக நின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி மில்லியன் பார்வைலர்களை கடந்து சென்றது. இதனால் இணையவாசிகள் அந்த சிறுவனுக்கு 'ஆரா கிட்' என்ற செல்லப் பெயரையும் கொடுத்தனர்.

தற்போது, அந்த சிறுவனை அழைத்து, பிரம்மாண்ட வரவேற்பினை கொடுத்து, சாய் பாயிண்ட் ஹோண்டாவின் உரிமையாளரான திலீப் போபடே பாட்டீல் ருத்ரான்ஷையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்திருந்தார். அந்தச் சந்திப்பின்போது, ​​அவர் ஒரு சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது, அக்குழந்தையின் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்விச் செலவுகளைத் தானே ஏற்பதாக அவர் உறுதியளித்தார்.

மேலும், ருத்ரன்ஷின் தாயார் இந்த வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, தன் மகன் மீது மக்கள் இவ்வளவு அன்பைக் காட்டி, அவனது எதிர்காலத்திற்காகப் பங்களிப்பதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வெறும் டிரெண்டிங்காக அந்த சிறுவனை பார்த்து கடந்து சென்று விடாமல், அந்த சிறுவனுக்கு கல்வி ரீதியாக அதுவும் பள்ளி படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஏற்றுக்கொவதாக கூறியிருப்பது நெட்டிசன்களின் பாராட்டினை பெற்றுவருகிறது. மேலும், குறுக்கியகாலம் மட்டுமே வலம் வரும் இந்த டிரெண்டிங்-கால் தற்போது இந்த சிறுவனின் வாழ்க்கை செட்டில் என்று இணையவாசிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.