இந்துக்களின் மனதை புண்படுத்தியதா ராமாயணா? “ராவணன் தான் ஹீரோவா?” - 2ம் பாகத்துக்கு.. இந்து அமைப்பு போட்ட கண்டிஷன்!

"லட்சுமணனை சீதை கண்டிப்பது, கரன் மற்றும் தூஷணன் ஆகியோரிடம் ராமர் மன்னிப்புக் கேட்பது போன்ற காட்சிகளும்.."
இந்துக்களின் மனதை புண்படுத்தியதா ராமாயணா? “ராவணன் தான் ஹீரோவா?” - 2ம் பாகத்துக்கு.. இந்து அமைப்பு போட்ட கண்டிஷன்!
Published on: 
Updated on: 
2 min read

நிதிஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு கந்த 6ம் தேதி திரைக்கு வந்துள்ள ராமாயணா திரைப்படம், ஒருபுறம் வசூலில் மாஸ் கட்டி வருகிறது. மறுபுறம் சில சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. இந்து இதிகாசமான ராமாயணத்தைத் தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி கோவாவைச் சேர்ந்த இந்து அமைப்பு படத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாலிவூட் பிரபலம் ரன்பீர் கபூர் இராமராகவும், நடிகர் யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வால்மீகி எழுதிய ராமாயணத்தை மட்டும் வைத்து உருவாக்காமல், பல்வேறு மற்ற ஆசிரியர்கள் எழுதிய ராமாயணத்தையும் ரெபரென்ஸாக கொண்டு இந்த படம் இயக்கப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. ராவணன் சீதையை கடத்திச் செல்வதுடன் நிறைவடைந்துள்ள முதல பாகம், உலக அளவில் ரூ.1,400 கோடிக்கும் அதிகமான  வசூலை குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பாலிவுட் திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலிப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

இப்படி வசூலில் மாஸ் காட்டி வரும் ராமாயணா படத்திற்குத்தான் தற்போது எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. கோவாவைச் சேர்ந்த 'இந்து ஜனாகிருதி சமிதி' என்ற இந்து அமைப்பு தற்போது எதிர்மறை கருத்தை முன்வைத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் மனோஜ் சோலன்கி, ராமாயணா திரைப்படம் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், படத்தில் வால்மீகி ராமாயணத்தின் மூலக்கதையை மாற்றி, தற்கால அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளைத் திணித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, சீதையைக் கடத்தி சென்ற ராவணனை பெண்களின் பாதுகாவலராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவராகவும் சித்தரித்திருப்பது தவறான அணுகுமுறை என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சூர்ப்பணகையின் மூக்கை அறுத்த லட்சுமணனை சீதை கண்டிப்பது, கரன் மற்றும் தூஷணன் ஆகியோரிடம் ராமர் மன்னிப்புக் கேட்பது போன்ற காட்சிகளும் மூல ராமாயணத்தின் கதையை மாற்றும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தியாகத்தின் அடையாளமாகக் கருதப்படும் லட்சுமணனை முன்கோபக்காரராகவும், கேலிப் பேச்சு பேசுபவராகவும் காட்டியிருப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராமர் மற்றும் லட்சுமணனைத் தவறாகச் சித்தரித்துவிட்டு, ராவணனை உயர்த்திக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார்.

2-ம் பாகத்துக்கு எச்சரிக்கை!

இதுமட்டுமின்றி, இந்தப் படம் கம்யூனிச சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மனோஜ் சோலன்கி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் இந்துக்கள் ராமாயணா திரைப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்து அமைப்பினரிடம் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இரண்டாம் பாகத்திலும் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே வசூலில் பெரும் சாதனை படைத்து வரும் ராமாயணா திரைப்படம், தற்போது மத உணர்வுகள் தொடர்பான சர்ச்சையிலும் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்