
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் உள்ள நாராயணபுர பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சதிஷ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். சதீஷ் அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 26 வயதான மது என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மது சதீஷை உண்மையாக காதலித்து வந்த நிலையில் சதிஷ் மதுவை டைம் பாசுக்கு காதலித்து வந்துள்ளார்.
இது மதுவின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவரின் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பக்கத்து ஊரில் வசித்து வந்த உறவினர்களின் வீட்டில் தங்க வைத்துள்ளனர். சதிஷ் உடனான காதலை முழுவதுமாக தடுக்க நினைத்து மதுவிடம் இருந்த போனையும் பறித்துள்ளனர். மேலும் அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
வீட்டில் இருந்த உறவினர்கள் வெளியில் சென்ற நிலையில் மது காதலனை சந்திக்க யாருக்கும் தெரியாமல் சென்றுள்ளார். அப்போது யாருக்கும் தெரியாமல் பேச வேண்டும் என்பதற்காக சதிஷ் மதுவை அவரது தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் பேசிகொண்டிருந்த போது மது “என்னை இப்போதே திருமணம் செய்து கொள் நான் வீட்டிற்கு சென்றால் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்” என கூறி வற்புறுத்தியுள்ளார்.
சதிஷ் மதுவை உண்மையாக காதலிக்காமல் இருந்ததால், திருமணம் செய்து கொள்ள கூறியதை கேட்டு ஆத்திரம் அடைந்துள்ளார். எவ்வளவு சொல்லியும் அதனை ஏற்க மது மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் சதிஷ் மதுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். உடலை அவரின் நிலத்திலேயே குழி தோண்டி புதைத்துள்ளார். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்ள கூடாது என திட்டம் தீட்டி.
அந்த திட்டத்தின் படி மதுவின் போனை வேறொரு இடத்திற்கு எடுத்து சென்று சுவிட்ச் ஆப் செய்து உடைத்து பிறகு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு சென்றுள்ளார் சதிஷ். இந்நிலையில் மதுவின் பெற்றோர் அவரை காணவில்லை என போலீசில் புகாரளித்துள்ளனர். புகாரின் படி விசாரிக்க தொடங்கிய போலீசார் சதீஷிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தனக்கு எதுவும் தெரியாதது போல நடித்து தப்பியுள்ளார் சதிஷ்.
இருப்பினும் சதீஷை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் அவர் அடிக்கடி அவரது நிலத்திற்கு சென்று வருவதை கவனித்துள்ளனர். பயிர் எதுவும் செய்யாத நிலத்திற்கு சதிஷ் அடிக்கடி சென்று வருவது போலீசுக்கு அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எனவே சதீஷை கைது செய்து மீண்டும் விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மையும் தெரியவந்துள்ளது.
சதீஷின் வாக்குமூலத்தில் போலீசாருக்கு மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. மதுவை கொன்று புதைத்து உடல் அழுகிய பின் மீண்டும் அவரது உடலை தோண்டி எடுத்து எலும்புகளை தனித்தனியே வெட்டி மீண்டும் வெவ்வேறு இடங்களில் புதைத்துள்ளார் சதிஷ்.
சதீஷை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதுவின் சில எலும்புகளை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலியின் எலும்புகளை தனித்தனியாக வெட்டி காதலன் புதைத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.