“சடலமாக இருந்த பக்கத்துக்கு வீட்டு பெண்” - பாட்டியிடம் கூறிய சிறுமி.. காதலியை கொன்று அறைக்குள் பூட்டிய கள்ளக்காதலன்!

பிரியம்வதாவின் உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில் இருவரும் அவர்களின் உறவை கைவிட்டுள்ளனர். ஆனால் பழகியபோது பிரியம்வதா வினோத்திற்கு அதிகமாக பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது
kerala murder news
kerala murder newskerala murder news
Published on
Updated on
1 min read

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள பஞ்சமூடு பகுதியை சேர்ந்தவர் வினோத் இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்கிறார். வினோத் குழந்தையை பார்த்து கொண்டு ஊரிலேயே கூலி வேலை செய்துவந்துள்ளார்.

வினோத்தின் பக்கத்துக்கு வீட்டில் பிரியம்வதா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவனை பிரிந்து தனியாக இருந்து இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். மகள்கள் அவர்களின் மாமியார் வீட்டில் வசித்து வரும் சூழலில் பிரியம்வதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த வினோத்திற்கு பிரியம்வதாவிற்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது, வினோத்தின் வீட்டில் தனிமையில் இருப்பது என தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இது பிரியம்வதாவின் உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில் இருவரும் அவர்களின் உறவை கைவிட்டுள்ளனர். ஆனால் பழகியபோது பிரியம்வதா வினோத்திற்கு அதிகமாக பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

உறவை கைவிட்ட பிறகு அந்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் பிரியம்வதா. இதனால் வினோத்திற்கு பிரியம்வதாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பணத்தை திரும்ப கேட்க பிரியம்வதா வினோத்தின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் வினோத் பிரியம்வாதவை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலை தனது அறையில் படுக்கையின் கீழ் மறைத்து வைத்துள்ளார். மறுநாள் எதிர்ச்சியாக வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வினோத்தின் மகள் பிரியம்வதாவின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சிறுமி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மூதாட்டியிடம் சென்று “பாட்டி அப்பா ரூம்ல கேட்ட நாத்தம் அடிக்கிது. பக்கத்துக்கு வீட்டு ஆன்டி ரத்தத்தோடு ரூம்ல இருகாங்க” என சொல்லியுள்ளார். அந்த மூதாட்டி இதனை போலீசில் தெரிவித்துள்ளார்.

இவற்றை எல்லாம் அறிந்த வினோத் போலீஸ் வீட்டிற்கு வருவதற்குள் தனது நண்பரின் உதவியுடன் உடலை வீட்டிற்கு பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த இரத்த கரைகளை பார்த்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணையில் வினோத் பிரியம்வதாவை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

வினோத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரியம்வதாவின் உடலை தோண்டி எடுத்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பக்கத்துக்கு விட்டு பெண்ணை கொன்று வீட்டிற்கு பின்புறத்தில் புதைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com