வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு.. இருவர் பலி! தீவிரமாக தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை

சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது
wayanad landslide
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், கல்லாடியில் இரட்டை சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தில் மழையால் மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை. சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து தற்போது வரை ஆறு பேர் மீட்கப்பட்டடுள்ளனர்.மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிட்டப்பட்டுள்ளது.

மண் மற்றும் இடிபாடுகள் சரிந்து விழுந்ததால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மழை பெய்து வருவதால் கல்லாடி சுரங்கப்பாதை அருகே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் ஆறு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கியுள்ளனரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாகனங்களும் சிக்கியுள்ளதாக சொல்லப்டுகிறது. இந்த பகுதியில் நேற்று இரவும் இன்று காலையும் கனமழை பெய்ததை அடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இப்பகுதியில் 265 மி.மீ கனமழை பதிவாகியுள்ளது. 

இதனால் சூரல்மலை ஆற்றின் நீரோட்டம் அதிகரித்துள்ளது. சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அருகில் ஒரு தேவாலயம் இருந்ததுள்ளது, அந்தத் தேவாலயத்தின் இடிபாடுகள் கூட காணப்படவில்லை என்றும் அருகிலிருந்த வீடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. மண் முழுவதுமாக சரிந்ததால் அப்பகுதியில் இருந்த கான்கிரீட் சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு வயநாடு தொகுதி அமைச்சர் டி. சித்திக் அறிவுறுத்தியுள்ளார். நிலச்சரிவைத் தொடர்ந்து, முதலமைச்சர் வி.டி. சதீசன், மாவட்ட அமைச்சர் டி. சித்திக்குடன் அவசரகால ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு அவர் அவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், வருவாய் அமைச்சர் ஏ.பி. அனில்குமார் மற்றும் சித்திக் ஆகியோரை வயநாடு திரும்புமாறும் அவர் அறிவுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com