

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலின் உலகளாவிய தாக்கம் குறித்துப் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, பொதுமுடக்கத்திற்கான சாத்தியக்கூறை குறிப்பிட்டதாக பல பதிவுகளும் இணைய விவாதங்கள் தொடங்கின. இந்து குறித்து இணையதளத்தில் ‘லாக்டவுன்’, ‘லாக்டவுன் செய்திகள்’, மற்றும் ‘இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா?’ போன்ற தேடல்கள் ட்ரெண்டாகி உள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் சூழலில், இந்தியாவில் தொடரும் எரிசக்தி இறக்குமதி நெருக்கடி, இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் விநியோகச் சங்கிலிகள் மீதான அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த லாக்டவுன் பற்றிய தேடல்கள் அதிகரித்தது.
பிரதமர் மோடி, இந்த வாரத் தொடக்கத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆற்றிய தனது உரைகளில் , பிரதமர் கோவிட்-19 பெருந்தொற்றை குறிப்பிட்டு உரையாற்றினார். ஆனால், ஒரு உலகளாவிய நெருக்கடியை நம் நாடு எவ்வாறு கையாண்டது என்பதை குறிப்பிட்டு ஒரு உதாரணமாக மட்டுமே அதைக் குறிப்பிட்டார். மேற்கு ஆசிய மோதலின் தாக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, கோவிட் காலகட்டத்தில் ஏற்பட்ட இடையூறுகளை இந்தியா முன்பே சமாளித்திருந்ததாகவும் , கடினமான காலங்களில் தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் மோடி வலியுறுத்தினார்.
"கோவிட்-19 பெருந்தொற்று போது பொதுமக்கள் ஒன்றுபட்டு நின்றதைப் போலவே, தயாராகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் " என்றும் அவர் குடிமக்களை வலியுறுத்திய போது, “போரினால் ஏற்படும் உலகளாவிய இடையூறுகள் நீண்டகாலப் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்றும் எச்சரித்தார். "நாம் காண்பது போல, இந்தப் போர் நிலைமை நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கிறது. எனவே, ஒவ்வொரு சவாலுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எனது குடிமக்களிடம் நான் கூற விரும்புகிறேன். இந்தப் போரின் பாதகமான விளைவுகள் நீண்ட காலம் நீடிப்பதற்கு வலுவான சாத்தியக்கூறு உள்ளது. ஆனால், அரசாங்கம் விழிப்புடனும், தயாராகவும், தேவையான அனைத்து முடிவுகளையும் எடுத்து, வியூகம் வகுப்பதில் முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது என்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்," என்று பிரதமர் கூறினார்.
இருப்பினும், அந்த இரண்டு உரைகளிலும் ‘முடக்கம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் லாக்டவுன் பற்றிய இந்த ஊகங்கள் பல்வேறு காரணிகளின் கலவையால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது. மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறித்த கவலைகள் . சில நாடுகளில் எல்பிஜி விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. போர் காரணமாக எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்சாரச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க, பிலிப்பைன்ஸ் தனது நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்திச் செயலாளர் அறிவித்த சில மணி நேரத்திலையே ‘அவசர நிலை’ அறிவிக்கப்பட்டது
இந்தியாவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தேவையான அவசர நிலை எதுவும் இந்தியாவில் இல்லை. நாட்டில் தற்போது மிகக் குறைவான கோவிட் பாதிப்புகளே உள்ளன, மேலும் பொது சுகாதார நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மாறாக, பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கவனம், மேற்கு ஆசிய மோதலினால் ஏற்படும் பொருளாதார மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளை, குறிப்பாக எண்ணெய், எரிவாயு மற்றும் உர ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறுகளை க் குறைப்பதில் இருந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய நாடாளுமன்ற உரையில் பொது முடக்கம் குறித்து குறிப்பிடவில்லை. நாடு முந்தைய உலகளாவிய இடையூறுகளை ஒற்றுமையுடனும் தயார்நிலையுடனும் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே அவர் கோவிட்-19 காலகட்டத்தைக் குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.