``மக்களவை MP-கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. மாநிலங்களவை நிலை என்ன?" - மாநில உரிமைகள் பறிபோகிறதா?

நாடாளுமன்றத்தில் சாதாரண மசோதாக்கள் அல்லது அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் நிறைவேறும்போது மக்களவைக்கு நிகரான அதிகாரத்தை மாநிலங்களவை உறுப்பினர்களும் பெற்றுள்ளனர்.
 Will Increasing Lok Sabha MPs Weaken the Rajya Sabha and State Rights?
``மக்களவை MP-கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. மாநிலங்களவை நிலை என்ன?" - மாநில உரிமைகள் பறிபோகிறதா?
Published on: 
Updated on: 
1 min read

தொகுதி மறுவரையறை மசோதா கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாட்டில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக மசோதாவை எதிர்த்த காட்சிகள் இப்போது ஆதரவு தெரிவித்துள்ளன.

குறிப்பாக திமுக ஆரம்பம் முதலே நியாயமான தொகுதி மறுவரையறையையே கேட்டு வந்ததாகவும், இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநித்துவத்தை (7.18%) குறைக்காது என்பதனால் மசோதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக திமுக தரப்பு கூறுகிறது.

ஆனாலும் இந்தியா கூட்டணி மற்றும் பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தொகுதிகளின் எல்லை நிர்ணயம் பாஜகவுக்கு சாதகமாக நடக்கலாம் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது எல்லோருக்கும் பேசுவதற்கான நேரம் கிடைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இவற்றையெல்லாம் விட கண்ணுக்குத் தெரியாத பல ஆபத்து இந்த தொகுதி மறுவரையறை மசோதாவில் ஒளிந்திருக்கிறது.

இந்திய நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளைக் கொண்டது. மாநிலங்களவையில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் சாதாரண மசோதாக்கள் அல்லது அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் நிறைவேறும்போது மக்களவைக்கு நிகரான அதிகாரத்தை மாநிலங்களவை உறுப்பினர்களும் பெற்றுள்ளனர்.

இதனால் பாஜக அரசு பல்வேறு மசோதாக்களை பண மசோதாவாகக் (money bill) கொண்டுவந்தது சர்ச்சையைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்களால் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் கவனிப்பது மாநிலங்களவையின் கடன்.

இன்றைய நிலவரப்படி நாடாளுமன்ற மக்களவையில், 543 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் உள்ளனர். இதில் 12 பேர் குடியரசுத் தலைவரால் நிர்ணயிக்கப்படுகின்றனர்.

 Will Increasing Lok Sabha MPs Weaken the Rajya Sabha and State Rights?
“Delimitation-ஐ ஆதரிப்பது மக்களுக்கு இழைக்கும் துரோகம்!” – எச்சரிக்கும் CJP... ஆனாலும் பெருகும் ஆதரவு... நிறைவேறுமா மசோதா?

இப்போதைய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையின் பங்கு 31.1%.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 815 அல்லது 816 ஆக உயர்த்தப்பட்டால், மாநிலங்களவையின் பங்கு 23% ஆக குறையும்.

அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்களுக்கு நிச்சயமாக மாநிலங்களவையில் பெரும்பான்மை வேண்டும் என்பதால் ஆபத்து இருக்காது. ஆனால் சாதாரண மசோதாக்களை நிறைவேற்ற கூட்டுக்கூட்டம் கூட்டினால் அதில் மாநிலங்களவையின் பலம் மிகக் குறைவாக இருக்கும்.

மாநில உரிமைகளுக்கான குரல், உருவாக்கப்படவுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றத்தில் ஒரு துரும்பைப் போல நலிவடைந்து போகும்.

 Will Increasing Lok Sabha MPs Weaken the Rajya Sabha and State Rights?
தீ வைத்து கொழுத்திய ஸ்டாலின்.. இப்போது ஏற்றுக்கொள்வது ஏன்? ஏப்ரல் டு நவம்பர்... தொகுதி மறுவரையறையில் 5 முக்கிய மாற்றங்கள் என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.