"அம்மா எனக்கு பயமா இருக்கு" கலங்கியழும் குழந்தை.. தம்பதியின் சட்டப்போராட்டம்! நீதிமன்றம் தீர்ப்பளித்தும்.. குழந்தையை வழங்காதது ஏன்?

அந்த மனுவில் கூறப்பட்டதன்படி, அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் இந்த தம்பதியினர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுக்காமல், சட்ட விரோதமாக வளர்த்து வருவதாக புகார் அளித்துள்ளார்.
 "Mom, I'm Scared" - A Crying Child and a Couple's Legal Struggle: Why Has the Court's Verdict Not Been Implemented to Hand Over the Child?
"அம்மா எனக்கு பயமா இருக்கு" காலங்கியழும் குழந்தை.. தம்பதியின் சட்டப்போராட்டம் .. நீதிமன்றம் தீர்ப்பழித்தும் குழந்தையை வழங்காதது ஏன்?
Published on: 
Updated on: 
1 min read

தெலுங்கானா மாநிலத்தில் குழந்தைகள் நல கமிட்டி (CWC) பொறுப்பில் இருக்கும் குழந்தை ஒன்று அதன் தாய் - தந்தையிடம் கதறி அழும் வீடியோ காண்பவர் மனதை கலங்க வைக்கிறது.

அந்த குழந்தையை 3 ஆண்டுகள் வளர்த்து வந்த பெற்றோர், அரசு நிர்வாகத்தின் அனுமதி இல்லாததால் கையறு நிலையில் நின்று குழந்தையை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்த குழந்தை பிறந்த ஒன்றிரண்டு நாட்களுக்கு உள்ளேயே அதன் தாயார் இறந்துவிட்டார். குழந்தை இல்லாத அந்த தம்பதி பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் அந்த குழந்தையைத் தத்தெடுத்து 3 ஆண்டுகள் வளர்த்து வந்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை ஜக்தியா ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக வளாகத்தில் (IDOC) நடைபெற்ற மக்கள் பொதுக் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, ​​அந்தத் தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டதன்படி, அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் இந்த தம்பதியினர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுக்காமல், சட்ட விரோதமாக வளர்த்து வருவதாக புகார் அளித்துள்ளார்.

இதனால் குழந்தை தம்பதியிடம் இருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படிக்கப்பட்டுள்ளது. அரசு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 3 மாதங்களாக குழந்தையை தங்க வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கடந்த அக்டோபர் 16ம் தேதி குழந்தைகளை ஒப்படைக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்ப்பை நிறைவேற்ற குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர்கள் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியாரிடம் அந்த தம்பதி முறையிட்டுள்ளனர்.

குழந்தைகள் நலக் குழுவின் (CWC) அனுமதி மற்றும் இதர நிர்வாக நடைமுறைகள் காரணமாக ஒப்படைப்பு தாமதமானதாக மாவட்ட ஆட்சியர் பி. சத்ய பிரசாத் தெரிவித்துள்ளார். உரிய நடைமுறைகள் முடிந்த பிறகு, விரைவில் சிறுவன் தத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவான் என்றும் அவர் கூறியுள்ளார்.

 "Mom, I'm Scared" - A Crying Child and a Couple's Legal Struggle: Why Has the Court's Verdict Not Been Implemented to Hand Over the Child?
``உச்ச நீதிமன்றத்தின் பச்சை கொடி.." 2வது திருமணம் செய்த காஷ்மீர் முதலமைச்சர்.. 56 வயதில் புதிய வாழ்க்கை.. மணப்பெண் போட்ட cool பதிவு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.