
மைசூர் சாண்டல் சோப்பு.. கர்நாடகாவின் கலாசார பெருமையும், இந்தியாவின் மணம் நிறைந்த பாரம்பரியமும் இணைந்த ஒரு பொருள். 1916-ல் மைசூர் மகாராஜாவால் தொடங்கப்பட்ட இந்த சோப், இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் ஒரு முக்கியமான இடத்தை பிடிச்சிருக்கு. ஆனா, இந்த சோப்போட புது விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டது, கர்நாடகாவில் ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கு.
மைசூர் சாண்டல் சோப், கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) நிறுவனத்தால் தயாரிக்கப்படுது. 1916-ல் மைசூர் மகாராஜா நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் மற்றும் திவான் சர் எம். விஸ்வேஸ்வரய்யா ஆகியோரோட தொலைநோக்கு பார்வையால் உருவாக்கப்பட்ட இந்த சோப், கர்நாடகாவின் சந்தன மரத்தின் மணத்தை உலக அளவில் பறைசாற்றியிருக்கு. இந்தியாவின் முதல் சந்தன எண்ணெய் சோப்பு, பிரிட்டிஷ் ஃபார்மகோபியா தரத்தை பூர்த்தி செய்து, கர்நாடகாவின் கலாசார அடையாளமா மாறியிருக்கு. KSDL, 2024-25 நிதியாண்டில் ₹1,788 கோடி வருவாய் ஈட்டியிருக்கு, 2030-க்குள் ₹5,000 கோடி இலக்கை அடைய திட்டமிட்டிருக்கு.
மே 22, 2025 அன்று, கர்நாடக அரசு, தமன்னா பாட்டியாவை மைசூர் சாண்டல் சோப் மற்றும் KSDL-இன் பிற பொருட்களுக்கு விளம்பரத் தூதராக நியமிப்பதாக அறிவிச்சது. இந்த ஒப்பந்தம், இரண்டு வருடங்களுக்கு ₹6.2 கோடி மதிப்பிலானது. தமன்னாவின் 2.8 Followers, இந்தியா முழுக்க அவரோட புகழ், மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவரோட ஈர்ப்பு ஆகியவை இந்த நியமனத்துக்கு காரணம்னு அரசு கூறுது. இந்த முடிவு, சோப்பை வட இந்திய சந்தைகளிலும், உலக அளவிலும் பிரபலப்படுத்தறதுக்கு ஒரு உத்தியா இருக்குன்னு கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டில் விளக்கினார்.
சர்ச்சையின் மையம்: கன்னட பெருமை vs பாலிவுட் தேர்வு
மைசூர் சாண்டல் சோப்பு, கர்நாடகாவின் கலாசார அடையாளமா இருக்கறப்போ, ஏன் ஒரு பாலிவுட் நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டாங்க? ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, அல்லது ரம்யா மாதிரியான கன்னட நடிகைகளை ஏன் கவனிக்கலைன்னு பலரும் கேள்வி எழுப்பி இருக்காங்க
தமன்னா, மும்பையில் பிறந்தவர், கன்னட மொழியோ, கர்நாடகாவின் கலாசாரமோ தெரியாதவர். இது, மைசூர் சாண்டல் சோப்போட உணர்வு பிணைப்பை பலவீனப்படுத்துதுன்னு விமர்சகர்கள் கூறறாங்க. மைசூர் எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ வாடியார், “இந்த சோப் ஒரு பொருள் மட்டுமல்ல, கன்னட மக்களோட பாரம்பரியமும், பெருமையும். இதுக்கு ஒரு கன்னட நடிகைதான் பொருத்தமா இருப்பாங்க”னு கடுமையா விமர்சித்திருக்கார்.
"தமன்னாவுக்கு கொடுக்கப்படும் 6.2 கோடி தொகையை கர்நாடகாவின் உள்கட்டமைப்பு, ஏழைகளுக்கு உதவி, அல்லது கன்னட திரையுலகத்தை மேம்படுத்தறதுக்கு பயன்படுத்தியிருக்கலாமே”னு நடிகை சஞ்ஜனா கல்ராணி கருத்து தெரிவித்திருக்கார்.
கர்நாடக ரக்ஷண வேதிகே மற்றும் யுவ கர்நாடக வேதிகே மாதிரியான கன்னட ஆதரவு அமைப்புகள், பெங்களூரில் KSDL அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்தினாங்க. “தமன்னாவை நீக்கு, கன்னட நடிகையை நியமி”ன்னு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அரசின் பதில்
இந்த எதிர்ப்புக்கு பதிலளிக்கறதுக்கு, கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டில், தமன்னாவின் நியமனம் ஒரு “வணிக முடிவு”ன்னு விளக்கினார். அவரோட முக்கிய வாதங்கள்:
பான்-இந்திய அப்பீல்: மைசூர் சாண்டல் சோப்பு, கர்நாடகாவில் ஏற்கனவே பிரபலமா இருக்கு, ஆனா வட இந்தியாவிலும், உலக சந்தையிலும் இதோட பிராண்டை வளர்க்கணும். தமன்னாவின் 28 மில்லியன் சமூக Followers, இளைஞர்கள் மத்தியில் அவரோட புகழ், இந்த இலக்குக்கு உதவும்னு பாட்டில் கூறினார்.
KSDL, தீபிகா படுகோணே, ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, மற்றும் கியாரா அத்வானி ஆகியோரை அணுகியது, ஆனா தீபிகா தன்னோட பொருட்களை விளம்பரப்படுத்தறதுல பிஸியா இருந்தார், மற்றவர்கள் வேற நிறுவனங்களோட ஒப்பந்தங்களால முடியலைன்னு பாட்டில் விளக்கினார்.
அதுமட்டுமின்றி, மைசூர் சாண்டல் சோப்பை ஒரு உலகளாவிய பிராண்டா மாற்றறதுக்கு, எதிர்காலத்துல ஹாலிவுட் நடிகைகளையும் கூட அணுகலாம்னு பாட்டில் குறிப்பிட்டார். “இது கன்னட மொழி அல்லது அடையாளத்துக்கு எதிரான முடிவு இல்லை, இது ஒரு வணிக உத்தி”ன்னு வலியுறுத்தினார். மேலும், KSDL-இன் வருவாய், 18% மட்டுமே கர்நாடகாவில் இருந்து வருது. மீதி 82% வெளி மாநிலங்கள் மற்றும் சர்வதேச சந்தைகளில் இருந்து வருது. இதனால, ஒரு பான்-இந்திய முகத்தை தேர்ந்தெடுக்கறது அவசியம்னு பாட்டில் கூறியுள்ளார்.
எதிர்ப்பின் முக்கிய குரல்
மைசூர் எம்.பி. மற்றும் மைசூர் அரச குடும்ப வாரிசான யதுவீர், இந்த முடிவை “பொறுப்பற்றது, கன்னட அடையாளத்துக்கு அவமரியாதை”ன்னு விமர்சிச்சார். “தமன்னாவுக்கு கன்னட கலாசாரத்தோட எந்த தொடர்பும் இல்லை. ஒரு கன்னட நடிகையை தேர்ந்தெடுத்திருந்தா, மக்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்திருக்கும்”னு கூறினார்.
மைசூர் சாண்டல் சோப்பின் பயணம்
மைசூர் சாண்டல் சோப்பு, ஒரு சாதாரண பொருள் இல்லை. 1916-ல், மைசூர் மகாராஜா, சந்தன எண்ணெயை “இந்தியாவின் மணம் தூதர்” ஆக மாற்ற விரும்பினார். இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) பேராசிரியர்கள் சுத்போரோ மற்றும் வாட்சன் தலைமையில் முதல் சந்தன எண்ணெய் பரிசோதனை நடந்தது. இதன் விளைவாக, உயர்தர சந்தன எண்ணெய் கொண்ட இந்த சோப்பு, உலக அளவில் அங்கீகாரம் பெற்றது. KSDL, இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து, இன்று ஒரு ₹1,788 கோடி நிறுவனமா வளர்ந்திருக்கு. எனினும், இந்த சர்ச்சை, கர்நாடக அரசுக்கு ஒரு பெரிய சவாலை கொடுத்திருக்கு. அரசு, தமன்னாவோட ஒப்பந்தத்தை தொடர்ந்தா, கன்னட ஆதரவு குழுக்களோட எதிர்ப்பு தீவிரமாகலாம். மறுபக்கம், ஒப்பந்தத்தை ரத்து செய்தா, KSDL-இன் உலகளாவிய இலக்கு பாதிக்கப்படலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்