பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த நிதிஷ்..! 100% சங்கியாகவே மாறிவிட்டாரா? - RJD காட்டம்!!

திங்கட்கிழமை பாட்னாவில் கார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண் மருத்துவருக்கு பணி நியமனக் கடிதம்..
Nitish-hijab
Nitish-hijab
Published on
Updated on
1 min read

2025 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் தேர்தலில்  காங்கிரஸ், RJD -யின் மஹாகட்பந்தன் கூட்டணியை பாதாளத்திற்கு தள்ளி, , NDA கூட்டணி 203 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 

நிதிஷ் குமார் 10 -வது முறையாக பீகாரின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் மாநிலத்தின் காவல், உள்துறை அனைத்தும் பாஜக -வசம் உள்ளது. ஏற்கனவே நிதிஷ் ‘பொம்மை முதல்வராகத்தான் உள்ளார்’ என எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி விமர்சித்து வருகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் வாய்க்கு வேலைத்தரும் செயலில் நிதிஷ் ஈடுபட்டுள்ளார். இது பெரும் பேசுபொருளாகி உள்ளது. 

திங்கட்கிழமை பாட்னாவில் கார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண் மருத்துவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கும்போது அவரது ஹிஜாபை அகற்றிய காட்சி இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் நிகழ்வு முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது. பணி நியமனக் கடிதங்களை வழங்கும் போது, நுஸ்ரத் பர்வீன் என்ற மருத்துவர்  தனது கடிதத்தைப் பெற  முன்னால் வந்தார். 

பிறகு, முதல்வர் நிதிஷ் குமார் அந்தப் பெண்ணின் தலையில் கட்டப்பட்டிருந்த ஸ்கார்ஃபைச் சுட்டிக்காட்டி, அதைப் பற்றிக் கேட்டு, பின்னர் அவரின் அனுமதியின்றி அவரே அதை அகற்றினார். இந்த நேரத்தில், நிகழ்ச்சியில் இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கியதால், பெண் மருத்துவர் முகம் அசௌகரியமாக மாறியது. 

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, இந்த சம்பவத்தின் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து, "நிதிஷ் ஜீக்கு என்ன ஆனது? அவரது மனநிலை முற்றிலும் மோசமடைந்துவிட்டதா, இல்லை நிதிஷ் பாபு இப்போது 100% சங்கியாகிவிட்டாரா?" என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி இதை "அருவருப்பான செயல்" என்று விமர்சித்துள்ளது. மேலும், "இந்த வெட்கக்கேடான செயலைப் பாருங்கள். ஒரு பெண் மருத்துவர் தனது பணி நியமனக் கடிதத்தைப் பெற வந்தபோது, நிதிஷ் குமார் அவரது ஹிஜாபை பிடித்து இழுத்தார். மாநிலத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நபர் பொதுவெளியில் இப்படி ஒரு செயலைச் செய்தால், பெண்கள் பாதுகாப்பு பல்லிளிக்கிறது என்பதையே காட்டுகிறது. இது மன்னிப்புக்குக்கூட தகுதியற்றது. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்." என்று கூறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com