

போக்சோ வழக்கில் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம். ஒரு பெண்ணிடம் ‘I Love You’ என கூறுவது பாலியல் குற்றம் என போக்சோ வழக்கில் முக்கிய கருத்து.
இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறார்களை பாதுகாக்கும் பல்வேறு சிறப்பு சட்டங்கள் உள்ளன. அதில் சிறார்களை பாதுகாக்கும் மிக முக்கியமான சட்டம் தான் போக்சோ. சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டம் 20212-ல் கொண்டுவரப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள் எனவும் அவர்கள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் தொந்தரவுகளை தடுக்கவும் அல்லது நடக்கும் குற்றங்களை ஆராய்ந்து கடுமையான தண்டனைகள் பெற்றுத்தரவும் இந்த சட்டங்கள் உதவும். அதன் கீழ் பல குற்றவாளிகள் மீது பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்.
2016 ஜனவரியில் ராய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மீது புகாரளித்திருந்தார். அதில் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞர் அஜித் ராவ் என்பவர் சுமார் நான்கு மாதங்களாக அந்த பெண்ணை பின் தொடர்ந்து, பள்ளிக்குச் செல்லும் வழியில் தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பார்க்கும் இடங்களில் எல்லாம் "ஐ லவ் யூ" என கூறியதாகவும், பொது இடங்களில் மாணவியின் பெயரை எழுதியும், மேலும் ஐ லவ் யூ என்று எழுதி அவமானப்படுத்தியதாகவும் அந்த மாணவி புகார் குறிப்பிட்டுள்ளார். அதை பல் முறை கண்டித்தும் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்தும் பொருட்படுத்தாமல் இந்த செயலை தொடர்ந்துள்ளார் அஜித்.
இந்த தொடர் தொந்தரவால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கும் பாதுகாப்பற்ற உணர்வுக்கு ஆளாகியுள்ளார். அதையடுத்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் தான் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அந்த நபர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி அரவிந்த் குமார் வர்மா இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தார்.
அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரித்து அவர்தான் குற்றவாளி என்று உறுதி செய்து, மாணவி குறிப்பிட்ட குற்றங்களை அவளது தாய் அல்லது அந்த சிறுமியே சாட்சி அளிக்கும் பட்சத்தில் அதை உண்மையாக கருதி நம்பும் வகையில் இருப்பதால் வேறு சாட்சியங்கள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். சிறுவர்களிடம் இவ்வாறு நடந்து கொள்வது போக்சோ சட்டத்தின் படி பாலியல் தொல்லை ஆகும் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இவ்வாறு பின் தொடர்ந்து ‘ஐ லவ் யு” என சொல்வது பாலியல் அத்துமீறல் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் வேறு எந்த குற்றப் பின்னணியிலும் இல்லாததைக் கருத்தில் கொண்டு சிறைத் தண்டனையை குறைக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அவரது 7 ஆண்டு சிறைத் தண்டனை 3.5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.