2008 நவம்பர் 26 ல் நடந்தது என்ன..? மீண்டும் மும்பைக்கு தாக்குதல் மிரட்டல் விட்ட பாகிஸ்தான்...!

2008 நவம்பர் 26 ல் நடந்தது என்ன..? மீண்டும் மும்பைக்கு தாக்குதல் மிரட்டல் விட்ட பாகிஸ்தான்...!
Published on
Updated on
1 min read

நவம்பர் 26 ல் நடைபெற்ற தாக்குதல் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதல் மும்பையில் நடத்தப்படும் என்ற மிரட்டல் செய்தி வெளியானதை அடுத்து பாதுகாபு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் குறுஞ்செய்தி:

மும்பை மாநகர போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு, பாகிஸ்தானில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டது. அதில், 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நவம்பர் 26 தாக்குதலை போல, மும்பையில் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தவுள்ளதாகவும், இந்த திட்டத்தை 6 பேர் கொண்ட கும்பல் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 நவம்பர் 26:

முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பை மீது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. இந்திய வரலாற்றிலேயே நவம்பர் 26 ஆம் தேதி என்பது மீள்முடியாத துயரை ஏற்படுத்திய தினமாகவே பார்க்கப்படுகிறது. அன்றைய தினம், மும்பையில் கடல் மார்க்கமாக ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம், மும்பை தாஜ் ஹோட்டல், காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தும், துப்பாக்கி சூடு நடத்தியும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாத கும்பல் நடத்திய கொடூரமான தாக்குதலில், பொதுமக்கள், வெளிநாட்டினர், காவல் துறையினர் உல்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் இதேபோன்று ஒரு தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து குறுஞ்செய்தி வந்திருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு:

இந்த வாட்ஸ் அப் குறுஞ்செய்தியை அடுத்து, மும்பை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள காவல்துறை,   அதன் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஒரு காவல் துறை அதிகாரி கூறுகையில், “மத்திய மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு நேற்றிரவு 11 மணியளவில் எழுத்து வடிவில்” மிரட்டல் செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார். 

மக்கள் கலக்கம்:

ஏற்கனவே, மும்பையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராய்காட் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 3 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன், மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. இந்த படகு எப்படி கரை ஒதுங்கியது என்ற விவரம் தெரியாத நிலையில், இந்த புதிய அச்சுறுத்தல் மக்களை மிகவும் கலக்கமடைய செய்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com