

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை துறையில் முக்கிய நடவடிக்கையாக, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட் நிறுவனத்தின் வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளது. 2026 ஏப்ரல் 24ஆம் தேதி வங்கி நேரம் முடிவடைந்திலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்ததாக RBI தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்ட பேடிஎம் அமைப்புகளில் ஒன்றாக இருந்த இந்த வங்கி தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
RBI எடுத்துள்ள இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அந்த வங்கிக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டு சில சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள், வங்கியின் செயல்பாட்டு பரப்பை குறைத்து அதன் வளர்ச்சியை முடக்கியன. மேலும் வங்கியை கலப்பதற்கான உச்ச நீதிமன்றத்தை நடப்போவதாகவும் தெரிவித்துள்ளது. "வங்கியைக் கலைப்பதற்காக ரிசர்வ் வங்கி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்" என திட்டவட்டமாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உரிமம் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்களையும் RBI தெளிவாக குறிப்பிட்டுள்ளது. வங்கியின் செயல்பாடுகள் பயனாளர்களின் நலனுக்கு பாதகமாக இருந்ததோடு, அதன் நிர்வாக நடைமுறைகள் பொதுநலனுக்கும் எதிரானதாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை மீறியதுடன், நிபந்தனைகளையும் பின்பற்ற தவறியுள்ளதாக RBI தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதில் எந்த பொதுநலனும் இல்லை என்ற முடிவுக்கு மத்திய வங்கி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வங்கியை முறையாக கலைக்கும் நடவடிக்கைக்காக உயர்நீதிமன்றத்தை அணுகவும் RBI தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வைப்பாளர்களிடையே கவலை எழுப்பியுள்ள நிலையில், அவர்களின் நிதி பாதுகாப்பு குறித்து RBI உறுதியளித்துள்ளது. வங்கியிடம் அனைத்து வைப்புகளையும் திருப்பிச் செலுத்த போதுமான நிதி இருப்பதாகவும், ஒழுங்குமுறை நடைமுறைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், வைப்பாளர்கள் தங்கள் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை என்றும் தெளியுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், பேடிஎம் நிறுவனமும் தனது பயனாளர்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளது. பேடிஎம் ஆப், யுபிஐ சேவைகள் மற்றும் வணிகர் பண பரிவர்த்தனைகள் வழக்கம்போல தொடர்ந்து செயல்படும் என்றும், பயனாளர்களின் தினசரி பரிவர்த்தனைகளுக்கு எந்த தடையும் ஏற்படாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், பேடிஎம் தனது பின்டெக் சேவைகளை கூட்டாண்மை வங்கிகள் மூலம் தொடரும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பேடிஎம் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது. வங்கி சேவைகள் இல்லாத சூழலில், அதன் பண பரிவர்த்தனை அமைப்பை எவ்வாறு மறுசீரமைக்கும் என்பதில் சந்தை கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவின் பின்டெக் துறையில் இது ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுவதுடன், மத்திய வங்கியின் விதிமுறைகளின் முக்கியத்துவத்தையும் இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது. பேடிஎம் வங்கி நிறுவனத்தின் உரிமத்தை ஏப்ரல் 24, 2026 அன்று ரத்து செய்ததை அடுத்து, பேடிஎம் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்த முடிவால் வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. UPI, பேடிஎம் ஆப் மற்றும் வாலட் சேவைகள் தொடர்ந்து செயல்பட்டாலும், வங்கி கணக்குகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து பயனர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.