நள்ளிரவு முதல் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை! 'WFH' அமலுக்கு வருமா? - "சர்வதேச போரால் அவதிக்குள்ளாகும் மக்கள்"

நள்ளிரவு 12 மணியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் வாக ஓட்டிகள் அனைவரும் அவதி
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.14 மற்றும் டீசல் ரூ. 3.11 உயர்ந்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச போர்ப் பதட்டம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் பதட்டம் காரணமான ஹேர்மோஸ் நீர்சந்தி வழியாக உலக நாடுகளின் கப்பல்கள் தங்களது எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு செல்வதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதன் காரணமாக உலகநாடுகள் கச்சா எண்ணெய் பாதிப்பினை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடுகள் தலைதூக்கியது. முக்கியமாக வணிக சிலிண்டர்கள் கிடைப்பது சிரமமான நிலையில், ஹோட்டல்கள் மூடப்பட்டன. மேலும், உணவு பொருட்கள், காபி, டீ போன்றவற்றின் விலையும் உயர்ந்தது. இதனையடுத்து பல்வேறு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. பின்பு வீட்டு சிலிண்டர் வரத்து குறைய ஆரம்பித்தது. மக்கள் பலரும் தங்களது காலி சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டர் பெறவிருந்தனர். தற்போது வீட்டுப்பயன்பாடு சிலிண்டரும் கிடைப்பது சிரமத்திற்குள்ளானது.

மேலும், இதற்கு முன்பு மத்திய அரசு வணிக சிலிண்டர்கள் விலையை உயர்த்தியபோதும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தப்போவதில்லை என்று கூறியது. இதனையடுத்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக, மக்கள் பொது போக்குவரத்துகளை பயன்படுத்த வேண்டியும், கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை பின்பற்றியதது போன்று பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார். இவனையடுத்து பிரதமரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. டெல்லியிலும் அரசு ஊழியர்களை பொது போக்குவரத்துகளை பயன்படுத்தக்கோரியும், வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய கோரியும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.

தற்போது நள்ளிரவு 12 மணியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் வாக ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com