``பீரங்கியின் வாயில் கட்டிவைத்து சுடப்பட்ட மக்கள் கற்பனை அல்ல" ரணபாலி பட சர்ச்சை.. இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் நடிகர் பேச்சு!

"ஒரு பிரிட்டிஷ் அதிகாரி குழந்தையை சூப்பில் வீசியதாக வரலாற்றுத் தரவுகள் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், மக்கள் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை" - நடிகர் பெனடிக்ட் காரெட்
British Actor Benedict Garrett Supports India Amid Ranabaali Movie Controversy
``பீரங்கியின் வாயில் கட்டிவைத்து சுடப்பட்ட மக்கள் கற்பனை அல்ல" ரணபாலி பட சர்ச்சை.. இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் நடிகர் பேச்சு!
Published on: 
Updated on: 
3 min read

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரணபாலி’. இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டது.

இந்தப் படத்தில் கொடுமைக்கார பிரிட்டிஷ் அதிகாரியாக பெனடிக்ட் காரெட் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் ஒரு குழந்தையைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கொல்வது போன்ற காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும்.

Ranabaali Horrible Scene
சர்ச்சைக்குள்ளான காட்சி

இந்தக் காட்சி, இந்தியர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் நடத்திய விதத்தை மிகைப்படுத்திக் காட்டுவதாகச் சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக, அந்தப் பாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் காரெட் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், தனது கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் பெனடிக்ட் காரெட்.

மேலே குறிப்பிட்ட காட்சியைப் பகிர்ந்த அவர், "இது மிகவும் தொந்தரவு செய்யக்கூடிய காட்சி. அதில் இருப்பது நான்தான். கொதிக்கும் சூப்பில் குழந்தையை எரிப்பது போன்ற இந்தக் காட்சிக்கு சில கமெண்ட்கள் வந்துள்ளன. குறிப்பாக, பிரிட்டிஷ் மக்களிடமிருந்து, இந்தப் படம் பிரிட்டிஷ் மக்கள் மீதும், வெள்ளையர்கள் மீதும் வெறுப்புணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், வரலாற்று ரீதியாகத் தவறான தகவல்களைக் கொண்டுள்ளது என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

என்னுடைய கதாபாத்திரம் கற்பனையான ஒன்று. இயல்புக்கு மீறிய அச்சமூட்டும் சாத்தான் போன்ற ஒருவன். அவனது ஹவுண்ட் ஆர்மி என்ற படையும் கற்பனையானது. ஒரு பிரிட்டிஷ் அதிகாரி குழந்தையை சூப்பில் வீசியதாக வரலாற்றுத் தரவுகள் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், மக்கள் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரை, இந்தக் காட்சியும் இந்தக் கதாபாத்திரமும் ஒரு உருவகம். காட்டிலிருந்து வெளிப்பட்டு, ஓர் இந்தியக் கிராமத்தின் மீது படையெடுத்து, யாருடைய உயிரையும் துச்சமாக நினைக்கிறானோ, அவர்கள் மீது கற்பனை செய்ய முடியாத துயரத்தை ஏவிவிடும் ஒரு பயங்கரமான உருவம்.

இது வெளியிலிருந்து வந்து, இன்னொருவர் வாழும் நிலத்தை ஆக்கிரமித்து, அங்கிருக்கும் மக்களைச் சுரண்டி, அவர்களின் உயிர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குழந்தைகளின் உயிர்களுக்கும் கூடச் சிறிதும் மதிப்பளிக்காத ஓர் ஏகாதிபத்திய சக்தியின் பிரதிநிதித்துவம் ஆகும்.

Ranabaali
Ranabaali

மேலும், இதன் வரலாற்றுப் பின்னணி மிகவும் உண்மையானது. 1876 முதல் 1878 வரை தென்னிந்தியாவையும், இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும் சீரழித்த 'பெரும் மெட்ராஸ் பஞ்சத்தின்' (Great Madras Famine) பின்னணியில் 'ரணபாலி' (Ranabaali) அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பரந்த பகுதிகளில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். வறட்சி நிச்சயமாக ஒரு காரணமாக இருந்தபோதிலும், பிரிட்டிஷ் காலனித்துவப் பொருளாதாரக் கொள்கைகள், உணவு விநியோகக் குளறுபடிகள், வரிவிதிப்பு மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகள் ஆகியவை ஏற்கெனவே பேரழிவாக இருந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கின.

இது மட்டுமே ஒரே உதாரணம் அல்ல. 1943-ம் ஆண்டு வங்காளப் பஞ்சம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, 1857-ம் ஆண்டு எழுச்சியைத் தொடர்ந்து நடந்த படுகொலைகள், பீரங்கிகளின் வாயில் கட்டி வைத்துச் சுடப்பட்ட மக்கள், பொது இடங்களில் சவுக்கடி கொடுக்கப்பட்ட சம்பவங்கள், இந்தியக் குழந்தைகள் தண்டிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் எனப் பல சம்பவங்கள் உள்ளன. இவை பிரிட்டிஷாருக்கு எதிராகப் புனையப்பட்ட கதைகள் அல்ல.

British Actor Benedict Garrett Supports India Amid Ranabaali Movie Controversy
``வாக்கு திருடனே அரியணையில் இருந்து இறங்கு" இத்தாலி அரசியல் தலைவரின் பேச்சால் கொந்தளித்த பாஜக.. 'anti-indian' விமர்சனம்!

"பிரிட்டிஷார் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை (சதி) ஒழித்தார்கள் அல்லது ரயில் பாதைகளை அமைத்தார்கள்" என்று யாராவது என்னிடம் சொல்வதற்கு முன்பு, ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

ஆம், ராஜா ராம் மோகன் ராய் போன்ற இந்தியச் சீர்திருத்தவாதிகளின் முக்கியப் பங்களிப்புடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனால், அந்த ரயில் பாதைகள் முதன்மையாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்காகவே அமைக்கப்பட்டன. அதாவது, துருப்புகளை நகர்த்தவும், இந்தியாவின் வளங்களைச் சுரண்டவும், விளைபொருட்களைத் துறைமுகங்களுக்கும் சர்வதேசச் சந்தைகளுக்கும் கொண்டு செல்லவுமே அவை பயன்படுத்தப்பட்டன.

பஞ்ச காலங்களில், சாதாரண இந்தியர்களால் தங்களுக்குத் தேவையான உணவைக்கூட வாங்க முடியாமல் தவித்தபோது, பட்டினியால் வாடிய பகுதிகளிலிருந்து தானியங்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டன.

எனவே, உள்கட்டமைப்பை உருவாக்கியதாலேயே காலனித்துவம் கருணை உள்ளம் கொண்டதாக மாறிவிடாது என்பதை மறந்துவிட வேண்டாம்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. மக்கள் இந்தப் படத்தை வெள்ளையர்களுக்கு எதிரானது அல்லது பிரிட்டிஷாருக்கு எதிரானது என்று கூறுகிறார்கள். ஆனால், இது வரலாற்றைப் பற்றியது மட்டுமல்ல. இன்றும்கூட, பிரிட்டனிலும் மேற்கத்திய நாடுகளிலும் உள்ள பலரால் இந்தியா, ஆப்பிரிக்கா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் கறுப்பின மற்றும் பழுப்பு நிற மக்களின் துயரங்களைப் பார்த்துவிட்டு, எந்தக் கவலையுமின்றித் தங்கள் வசதியான வாழ்க்கையைத் தொடர முடிகிறது. சிலருடைய உயிர்கள் மற்றவர்களின் உயிர்களைவிடக் குறைவான மதிப்புடையவை என்ற அலட்சியமான எண்ணம் இன்னும் மறையவில்லை.

நான் ஒரு பிரிட்டிஷ் நடிகர். நான் பிரிட்டிஷ்காரனாக இருப்பதற்கு வெட்கப்படவில்லை. ஆனால், என் நாட்டின் வரலாற்றின் ஒரு பகுதி என்பதற்காகவே நியாயப்படுத்த முடியாத ஒன்றை நான் நியாயப்படுத்தப் போவதில்லை. நீங்கள் உங்கள் நாட்டை நேசிக்க முடியும். அதே நேரத்தில், அதன் கடந்த காலத்தைப் பற்றியும் நேர்மையாக இருக்க முடியும்.

ஒரு கற்பனையான பிரிட்டிஷ் கதாபாத்திரத்தைப் பார்த்துப் புண்படுவதற்குப் பதிலாக, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் துன்பப்பட்ட உண்மையான மனிதர்களை அங்கீகரிப்பதில் நாம் இன்னும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும். ஏனெனில், அவர்களின் துயரம் கற்பனையல்ல.

British Actor Benedict Garrett Supports India Amid Ranabaali Movie Controversy
``அம்மாவின் அழகான வாழ்க்கை ஒரே நாளில் காணாமல் போனது" - எமோஷனலான ராகுல் காந்தி.. சோனியாவுக்கு 4 முறை புற்றுநோய் வந்ததா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.