“அடுத்தடுத்து மாறிய பதவிகள்” - பீகாரில் முதல் முறை ஆட்சி அமைத்த பாஜக.. நிதிஷ்குமார் ராஜினாமாவின் பின்னணி என்ன?

முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் முடிவும் இந்த அரசியல் மாற்றத்திற்கு காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது
nitish kumar
Published on
Updated on
1 min read

பீகார் அரசியலில் முக்கிய திருப்பமாக, சாம்ராட் சவுத்ரி இன்று மாநிலத்தின் 24வது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் குறிப்பாக அவரது சொந்த ஊரான முங்கர் கொண்டாட்டக் களையோடு மகிழ்ச்சி சூழல் நிலவி வருகிறது.

தாராபூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான சம்ராட் சௌத்ரி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட செய்தி வெளியாகியவுடன், அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை முதல் அவரது இல்லம் அமைந்துள்ள லக்கன்பூரில் மக்கள் திரண்டு பட்டாசு வெடித்து, இனிப்புகள் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவரது குடும்பத்தினரும் இந்த வரலாற்று தருணத்தை பகிர்ந்து கொள்ள வந்தடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தவர். 57 வயதான சாம்ராட் சவுத்ரி-க்கு  குறிப்பிடத்தக்க அரசியல் பாரம்பரியமும் இருக்கிறது.

இதற்கு பின்னணியாக, 2025 சட்டமன்றத் தேர்தலில் தாராபூரில் சம்ராட் சௌத்ரி பெற்ற அபார வெற்றி குறிப்பிடத்தக்கது. சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பெற்ற வெற்றி, அந்தத் தொகுதியின் வரலாற்றிலேயே மிகப்பெரியதாகும். இதற்காக, அவரது ஆதரவாளர் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா வழங்கிய வாக்குறுதியை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் முடிவும் இந்த அரசியல் மாற்றத்திற்கு காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. நிதிஷ் குமார், பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக பதவி வகித்து வகித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மாநிலங்களவை எம்பி யாக கடந்த 10 தேதி பதவியேற்றார். 

நிதிஷ் குமாரின் இந்த பதவியேற்புக்கு அடுத்து, பீகார் அரசியலில் மேலும் ஒரு முக்கிய அம்சமாக, துணை முதலமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சராக உயர்ந்த இரண்டாவது தலைவராக சம்ராட் சௌத்ரி உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பு கர்பூரி தாக்கூர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார். நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் துணை முதலமைச்சராகவும், நிதி மற்றும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம், சம்ராட் சௌத்ரியின் புதிய பொறுப்பில் முக்கிய பங்காற்றும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. மொத்தத்தில், சம்ராட் சௌத்ரியின் முதலமைச்சர் பதவியேற்பு, பீகார் அரசியலில் புதிய கட்டத்தைத் தொடங்குவதாக பார்க்கப்படுகிறது. மாநில வளர்ச்சிக்கும், நிர்வாக மாற்றத்திற்கும் இது முக்கிய தொடக்கமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சம்ராட் சௌத்ரியின் தலைமையில் பீகார் வளர்ச்சி புதிய பாதையில் பயணிக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்சாலைகள் நிறுவுவது, குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது, கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் சாலை வசதிகளில் முன்னேற்றம் கொண்டு வருவது போன்ற முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com