
'உடல்நலத்தை முன்னுரிமைப்படுத்தவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 67(அ) இன் படி, நான் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்' என்று நேற்று ஜக்தீப் தன்கர் தனது ராஜினாமாவை அறிவித்தார். இவர் பதவிக்காலம் இன்னும் முடியவடையவில்லை. உடல்நிலைக்கோளாறு என்ற கோரிக்கை ஏற்கப்பட்டாலும், அவர் ராஜினாமாவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் மூலம் குடியரசுத்துணை தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு புதியவர் நியமிக்கப்பட வேண்டும்.
அடுத்த துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, ராஜ்யசபாவின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் துணை குடியரசுத் தலைவர் ஆற்ற வேண்டிய அலுவல் பணிகளை செய்வார் என்று கூறப்படுகிறது.
ராஜினாமா பின்ணணி!!
ஏற்கனவே தன்கர் பதவி விலகி வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அப்போதெல்லாம் அவரை விட்டு வைத்துவிட்டு இப்போது ஏன் என்ற பல கேள்விகள் எழுப்பி வருகின்றன. இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் “இது பீகார் தேர்தலுக்கான வியூகம் என்கின்றனர் சிலர். பீகார் தேர்தலையொட்டி மக்கள் நலத்திட்டங்களை பொழிகின்றது அரசு. பீகாரின் முதல்வர் நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என பீகார் பாஜக -வினர் குரல் எழுப்பி வருகின்றன, இது நிச்சயம் மோடி அமித்ஷா ஒப்புதல் இல்லாமல் நடக்காது என்பது தான் உண்மை. பீகாரை பொறுத்தவரை நிதிஷ் குமாரின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. மேலும் அவரின் உடல்நிலை மிக மோசமாகியுள்ளது. மாநில அரசியலிலிருந்து நிதிஷ் குமாரை நீக்குவதன் மூலம் பாஜக பீகார் தேர்தலை புது வியூகத்துடன் அணுக இயலும் என்று நம்புகின்றனர். மேலும் சில பேர் தன்கர் மீது பல குற்றச்சாடடுகள் எழுந்துள்ளன. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அவர் சார்ந்த குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு நிரூபிக்க உள்ளதாக தகவல் கசிந்ததால் அவரின் பதவியை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் பாஜக -வின் ஊதுகுழலாக இருந்த தன்கரை பிரதமர் தரப்பு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்துமே பாஜக தலைமையின் உத்தரவு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.என அந்த பேட்டியில் அவர் பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.