தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி!

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில், பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்று, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

மூன்று விருதுகள்:

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் 8 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, சூரிய சக்தி முன்னேற்றம் மற்றும் இயற்கை எரிவாயு அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இதனடிப்படையில், யூனியன் பிரதேச அளவில் புதுச்சேரிக்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்துறை அமைச்சர்:

இந்த விருதுகள்  தொடர்பாக, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், 2021 -2022 ஆம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சிறந்த செயல்திறனுக்காக ஒரு விருதும், அதிக எண்ணிக்கையில் உயிர் எரிவாயு ஆலைகளை எட்டியதற்காக ஒரு விருதும், அதிக அளவில் கூரை சூரிய சக்தி அமைப்பு நிறுவியதில் இரண்டாவது இடத்திற்கு ஒரு விருதும் மொத்தம் மூன்று விருதுகள் புதுச்சேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

எந்த பிளவும் இல்லை:

தொடர்ந்து,  பேரவையில் ஆளும் அரசுக்கு எதிராக பாஜகவினர் பேசிவருவதால் கூட்டணியில் ஏதேனும் பிளவு உள்ளதா? என செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினர். அதற்கு  பதில் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், 
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் எந்தவித பிளவும் இல்லை என்றும், உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை பேரவையில் பேச உரிமை உள்ளது எனவும் உறுதிபட தெரிவித்தார்.

பாஜகவின் நிலைப்பாடு மாறவில்லை:

மக்களின் மேம்பாட்டிற்காகாவும், மாணவர்களின் நலனுக்காகவும் தான் இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேர்தல் நேரத்தில் பொய்யான இலவசங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை கொடுக்கக்கூடாது என்பது தான் பாஜகவின் எண்ணமாக உள்ளது என்றும், மாநிலத்திற்கு மாநிலம் பாஜகவின் நிலைப்பாடு மாறவில்லை என்றும் நமச்சிவாயம் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com