மேற்கு வங்கத்தில் பயங்கரம்! "லெனின் சிலை உடைத்து அராஜகம்" - தொடர்ந்து நிலவி வரும் பதட்டம்

முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜியாகஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு விளாடிமிர் லெனின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
லெனின் சிலை உடைப்பு
லெனின் சிலை உடைப்பு லெனின் சிலை உடைப்பு
Published on
Updated on
1 min read

2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் மாநில அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தின் சில பகுதிகளில் அரசியல் மோதல்கள் மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜியாகஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு விளாடிமிர் லெனின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்தக் காணொளியில் சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

293 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்தில் பாஜக 206 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இதற்கு மாறாக, கடந்த தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் இந்த முறை 80 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், மாநிலத்தில் பதற்றமான நிலையை உருவாக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, அரசியல் காரணங்களுக்காக தங்களை குறிவைத்து தவறான பிரச்சாரம் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “மக்களின் உண்மையான தீர்ப்பு மாற்றப்பட்டுவிட்டது” என்று குற்றம்சாட்டியதுடன், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com