பதவி விலகுவாரா தலைமை தேர்தல் அதிகாரி? இந்தியாவில் முதல் முறையை 193 எம்.பி க்கள் ஞானேஷ்குமாருக்கு எதிராக கையெழுத்திட்டதன் பின்னணி..

இண்டியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளோடு ஆம் ஆத்மி போன்ற கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக
Gyanesh Kumar
Published on
Updated on
2 min read

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்க கோரி 193 எம்.பி க்கள் ஆதரவு. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தலைமை தேர்தல் அதிகாரி பதவி நீக்க கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி  நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் மனு அளிப்பதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த மனுவில் 130 மக்களவை உறுப்பினர்கள் மற்றும்  63 மாநிலங்களவை உறுப்பினர்களும் இதுவரை கையெழுத்திட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய அரசியலமைப்பின் படி தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் இயற்ற கோரும் மனுவில் குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களும் 50 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இருக்க வேண்டும் என்பது விதி. உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸை சபாநாயகர் அல்லது தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 1968-ஆம் ஆண்டின் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் கீழ், இதற்கான விதிகள் உள்ளது. ஆகினும் அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த பதவி நீக்க கோரிய மனு மார்ச்13 மக்களவை அல்லது மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரை பதவியில் இருந்து நீக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மனு அளிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. தீர்மானத்தை சபாநாயகர் அல்லது தலைவர் ஏற்றுக் கொண்டால், புகார்களை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மையுடன் (Special Majority) தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இறுதியாக, குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

இண்டியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளோடு ஆம் ஆத்மி போன்ற கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாரபட்சமான நடவடிக்கை, தேர்தல் மோசடி மீதான விசாரணையை வேண்டுமென்றே தடுத்தல், பெருவாரியான வாக்குரிமை பறிப்பில் ஈடுபட்டது போன்ற ஏழு குற்றச்சாட்டுகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பல சந்தர்ப்பங்களில் ஆளும் பாஜகவுக்கு உதவியதாக எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் இந்த நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர். ஞானேஷ்குமார் “பாஜக சொல்லாட்சியைப் பின்பற்றுவதாகும்” பரவலாக விமர்சிக்கப்பட்டார். நாடாளுமன்ற அவையின் மொத்த உறுப்பினர்களில் சிறப்புப் பெரும்பான்மை அல்லது மன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களித்தவர்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான், பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் நாள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இந்த மனு தேர்தல் அறிவிப்புகளில்மாற்றத்தை ஏற்படுத்துமா என கேள்வி எழுகிறது. மேலும் இந்த மனுவில் குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களும் 50 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இருக்க வேண்டும் என்ற விதியின் படி அதற்கும் மேலாக மொத்தம் 193 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதக்க தெரிகிறது. இந்திய வரலாற்றிலேயே இந்த நிகழ்வு முதல் முறையாகும் மேலும் இதன்படி ஞானேஷ்குமார் பதவி நீக்கப்பட்டால் அதுவும் வரலாற்றில் முதல் முறையாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com