
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 33 வயதான சைத்ரா என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் கஜேந்திரனின் தாய் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கஜேந்திரன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் சைத்ராவிற்கு அப்பகுதியிலுள்ள புனீத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. தினமும் கஜேந்திரன் வேலைக்கு சென்ற பிறகு சைத்ரா புனீத்துடன் ஊர் சுற்றி வந்துள்ளார். இதை அறிந்த கஜேந்திரன் இரு வீட்டு பெரியவர்களிடமும் இதை தெரிவிக்க அவர்கள் சைத்ராவிற்கு அறிவுரை கூறி கஜேந்திரனுடன் வாழ வைத்துள்ளனர்.
சிறிது காலம் ஒழுங்காக நடந்து கொண்ட சைத்ராவிற்கு மீண்டும் தனது முன்னாள் காதலனான ஷிவு என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் சைத்ராவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் இதனால் சைத்ரா அளித்த புகாரின் பேரில் சிறைக்கும் சென்று வந்துள்ளார். அப்போதும் தன்னை திருத்தி கொள்ளாத சைத்ரா தனது காதலனுடன் சேர்ந்து குடும்பத்தையே கொள்ள முயற்சித்துள்ளார்.
காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய சைத்ரா குடும்பத்தாருக்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதனை கவனித்த சைத்ராவின் இரண்டாவது மகள் தனது தந்தையிடம் சென்று “அப்பா அம்மா தினமும் சாப்பாட்டுல எது மாத்திரை கலக்குறாங்க” என கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கஜேந்திரன் சைத்ரா இல்லாத போது அவரது உடமைகளை வைக்கும் பீரோவையும் அவர் பயன்படுத்தும் பைகளையும் சோதனை செய்துள்ளார். அப்போது சைத்ராவின் பையில் சில மாத்திரைகள் அட்டை அட்டையாக இருந்துள்ளது. அந்த மாத்திரைகளை எடுத்து கொண்டு தனக்கு தெரிந்த மருத்துவரிடம் கஜேந்திரன் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் அந்த மாத்திரைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் கஜேந்திரனிடம் “இது மிகவும் அதிகமான டோஸேஜ் உள்ள மாத்திரைகளை இதை மருத்துவர்கள் எளிதில் பரிந்துரை செய்ய மாட்டார்கள் உங்களுக்கு எப்படி கிடைத்தது” என கேட்டுள்ளார். நடந்ததை கூறிய கஜேந்திரன் பின்னர் குழந்தைகளை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர் பெரிய மகளுக்கு இந்த மாத்திரை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும். இன்னும் சிறுது காலம் இந்த மாத்திரைகளை உட்கொண்டு இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன் வீட்டிற்கு சென்று சைத்ராவிடம் இதை பற்றி கேட்டுள்ளார். அதற்கு சைத்ரா பதில் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தைகளை அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்ற கஜேந்திரன் சைத்ராவை பற்றி ஆதாரத்துடன் புகாரளித்துள்ளார். சைத்ராவை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் இதற்கு உதவியாக இருந்த ஷிவுவையும் கைது செய்துள்ளனர். சைத்ரா கள்ள காதலுக்காக குடும்பத்தையே கொல்ல திட்டம் தீட்டியதை அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.