கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றிய இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை மூலம் 9 பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் உருவாகியது.
இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படை இன்று அதிகாலை ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரை குறிவைத்து விமானத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இந்திய ஆயுதப்படைகள் அவற்றை இடைமறித்து தக்க பதிலடி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரையிலான காலப்பகுதியில் பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் எதிர்வினைத் தளவமைப்பு பல ட்ரோன்களை தடுப்பதில் வெற்றிபெற்றது.
ரஜோரி மாவட்டத்தில்..
ரஜோரி மாவட்டத்திலுள்ள டி.சி காலனியில்பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், கூடுதல் மாவட்ட காவல் ஆணையர் (ADC) ராஜ்குமார் தப்பா, மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். தப்பா அவரது இல்லத்தில் தாக்குதல் ஏற்படச் சிக்கினார்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஷெல்லிங் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இவ்வாறு நவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். மேலும் இரு நாடுகளிடையேயும் அணு ஆயுதங்கள் இருப்பதால் இந்திய பாகிஸ்தான் மோதல் உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றிய இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை மூலம் 9 பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் உருவாக்கியது.
இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படை இன்று அதிகாலை ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரை குறிவைத்து விமானத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இந்திய ஆயுதப்படைகள் அவற்றை இடைமறித்து தக்க பதிலடி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரையிலான காலப்பகுதியில் பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் எதிர்வினைத் தளவமைப்பு பல ட்ரோன்களை தடுப்பதில் வெற்றிபெற்றது.
ரஜோரி மாவட்டத்தில்..
ரஜோரி மாவட்டத்திலுள்ள டி.சி காலனியில்பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், கூடுதல் மாவட்ட காவல் ஆணையர் (ADC) ராஜ்குமார் தப்பா, மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். தப்பா அவரது இல்லத்தில் தாக்குதல் ஏற்படச் சிக்கினார்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஷெல்லிங் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இவ்வாறு நவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். மேலும் இரு நாடுகளிடையேயும் அணு ஆயுதங்கள் இருப்பதால் இந்திய பாகிஸ்தான் மோதல் உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்