விஷ பாம்பு கடித்து உயிரிழந்த தம்பி! உயிருக்கு போராடும் 10 வயது அண்ணன்.. சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

குழந்தைகளுக்கு நேற்று ஒரு விழாவில் சாப்பிட்ட உணவால்தான் வயிறு வலிப்பதாக நினைத்து
kerala snake bite
Published on
Updated on
1 min read

கேரளா, திருச்சூர் மாவட்டம் கோடாலி கிராமத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை பாம்பு கடித்து உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவனின் குடும்பம் , கொடச்சேரி மலையின் அடிவாரத்திலிருந்து வெறும் 200-250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது மலைப்பகுதி கிராமம் என்பதால், குடியிருப்புப் பகுதிகளுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பாம்புகள் அடிக்கடி தென்படுவதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதனாலே அங்குள்ள மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை மிகவும் கவனமாகச் சுத்தம் செய்து பராமரித்து வந்தனர். விஷ பாம்பு கடித்து உயிரிழந்த அல்ஜோவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சில்ஜோ மற்றும் ஜான்சி தம்பதிக்கு அல்ஜோ, அனேஷ் என்ற இரு மகன்களும் மற்றும் ஏஞ்சல் என்ற ஒரு மகளும் உள்ளனர். சனிக்கிழமை இரவு, அல்ஜோ மற்றும் அவனின் அண்ணண் அனேஷ் (10) தங்கள் பெற்றோருடன் தாழ்வாரத்தின் தரையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 2 மணியளவில், தூங்க முடியாமல் விழித்த இரண்டு குழந்தைகளும் வயிறு வலிப்பதாக அழுதுள்ளனர். உடல் அசௌகரியமாக இருந்த குழந்தைகளுக்கு நேற்று ஒரு விழாவில் சாப்பிட்ட உணவால்தான் வயிறு வலிப்பதாக நினைத்து, அவர்களது பெற்றோர் சீரகத் தண்ணீர் கொடுத்து மீண்டும் தூங்க வைத்துள்ளனர்.

முந்தைய நாள் மாலை, ஒரு உறவினரின் குடும்ப விழாவிற்குச் சென்றுவிட்டு, சுமார் இரவு 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். அங்கு அவர்கள் பழச்சாறு அருந்தியது தான் குழந்தைகளின் அசௌகரியத்திற்கு காரணம் என்று தவறாகப் புரிந்து கொண்ட பெற்றோர் அவர்களுக்கு வீட்டில் சூடு தண்ணீரில் சீரகம் போட்டு கொடுத்துள்ளனர் . அதன் பிறகு, குழந்தைகள் தங்கள் தாயுடன் படுக்கை அறைக்கு உறங்கச் சென்றுள்ளனர்.

அதிகாலை 5 மணியளவில் குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இளைய மகன் அல்ஜோ உயிரிழந்துள்ளார். அறிகுறிகளைக் கவனித்த மருத்துவர்கள் இது பாம்புக்கடியாக இருக்கலாம் எனச் சந்தேகித்ததை அடுத்து, உள்ளூர்வாசிகள் வீட்டில் தேடியபோது வீட்டில் ஒரு வெள்ளிப் பாம்பு கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்ணன் அனோஷுக்கு நஞ்சுமுறிவு மருந்து செலுத்தி சிகிச்சை தொடங்கப்பட்டது. அல்ஜோ உதட்டிலும், அனோஷ் உள்ளங்கையிலும் பாம்பு கடித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com