

நீலகிரி மாவட்டம் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை அருகே 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த 28 வயது இளைஞரை, 12 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருநாதன், கடந்த 19ம் தேதி வியாழக்கிழமையன்று 150 அடி ஆழமுள்ள ஊசிமலை பள்ளத்தாக்கில் செல்ஃபி எடுக்கும்போது தவறி வழுக்கி விழுந்த விழுந்திருக்கிறார். கீழே விழுந்தபோதிலும், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் தனது கைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு, நடுவட்டம் காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ட்ரோன் மூலம் தேடியபோது அவர் உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்ட வனத்துறையினரும் ராணுவத்தினரும் தொடர்ச்சியாக மீட்க முயன்று வந்தனர். ஆனால் இருள் மற்றும் காட்டில் யானைகள், புலிகள் போன்ற காட்டு விலங்குகள் இருந்ததால், மீட்புப் பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால், குழுக்கள் தங்கள் பணியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
ஆரம்பத்தில், இருள் மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டன. வன மற்றும் தீயணைப்புப் படையினர் கயிறுகளைப் பயன்படுத்தி அவரை காப்பாற்ற முயன்றனர், அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளுக்கு எதிராகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ராணுவத்தின் உதவியும் கோரப்பட்டது. குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமின் வீரர்கள் சிறப்பு உபகரணங்களுடன் மீட்புப் பணியில் காவலர்களுடன் இணைந்து, இரவு முழுவதும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்தனர்.
இராணுவத்தினருடன் மீப்பு குழுவினர் கைகோர்த்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சிவகுருநாதன் என்ற இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டார். தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.