"கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள்.. ரிவர்ஸ் கியரில் வளர்ச்சி.. show காட்டும் முதலமைச்சர்" - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஸ்டாலின்!

GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
MK Stalin criticises TVK government
MK Stalin criticises TVK government
Published on: 
Updated on: 
2 min read

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைதளப்பக்கத்தில், காலையில் அவர் கடந்து வந்த இரு செய்திகளை பகிர்ந்துள்ளார். அதில் GST வருவாய் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் பின்னோக்கி இருந்ததையும், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றதையும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், "பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Thangam Thennarasu GST statement
Thangam Thennarasu GST statement

எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனை சுட்டிக்கட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது X தளத்தில், தவெக அரசினை விமர்சித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:

1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாடு அரசின் முதன்மை முதலீட்டு மேம்பாட்டு முகமை அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government (கடினமான காலங்களுக்குத் தயாராக இருங்கள். தவெக ஆட்சியில் தமிழ்நாடு அழிவைச் சந்திக்கும்) என்று அவர் தனது X தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, குழந்தைகளை மாயமாவது, கொலைகள் நடப்பது, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை திமுக விமர்சித்து வந்த நிலையில், திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இவ்வாறு இருக்க, தற்போது GST வருவாய் வளர்ச்சி சரிவு, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.