2023 ஹாக்கி உலகக்கோப்பை தொடர்..! சென்னை கொண்டுவரபட்ட கோப்பை..!

2023 ஹாக்கி உலகக்கோப்பை தொடர்..! சென்னை கொண்டுவரபட்ட கோப்பை..!
Published on
Updated on
1 min read

ஹாக்கி உலகக்கோப்பை 2023 ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் கோப்பை சென்னை கொண்டுவரப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. அடுத்த மாதம் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி உலக கோப்பை நடைபெற உள்ளது. அதனையொட்டி ஹாக்கி கோப்பை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அந்த வகையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஹாக்கி கோப்பை சென்னை கொண்டுவரப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்று கொண்டார். மேலும் அவருடன் ஆக்கி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து  தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஹாக்கி கோப்பையை காண்பிக்க திறந்த வெளி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து இன்று மாலை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோப்பை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com