2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் : 6 மெட்ரோ இரயில் நிலையங்களை கைவிட நிர்வாகம் முடிவு

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் : 6 மெட்ரோ இரயில் நிலையங்களை கைவிட நிர்வாகம் முடிவு
Published on
Updated on
1 min read

சென்னை  2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில்  திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ இரயில் நிலையங்களை கைவிட  மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு.

திட்டம் கைவிடப்பட முடிவு 

சென்னையில்  இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திட்டமிட்டபட்டிருந்த டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, மற்றும்  தபால் பெட்டி ஆகியவை சுரங்க இரயில் நிலையங்களாகவும் செயிண்ட் ஜோசப் கல்லூரி உட்பட 6 இரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

750 மீட்டருக்கும் குறைவான தொலைவு

பொதுவாக ஒரு மெட்ரோ இரயில் நிலையம் 1 கி.மீ இடைவெளியில் அமைக்கப்படும்.... எனவே இந்த 6 மெட்ரோ இரயில் நிலையங்களும் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில்  திட்டமிடப்பட்டுள்ளதால் இத்திட்டத்தை  கைவிட  மெட்ரோ இரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 45.8 மீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில்  தபால் பெட்டி, டவுட்டன்,  செயிண்ட் ஜோசப் கல்லூரி  இரயில் நிலையங்கள் அமையவிருந்தன.

அதே போல  கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பட்டினப்பாக்கம்,நடேசன் பூங்கா,மீனாட்சி கல்லூரி அமையவிருந்தன. மாதவரம்  பால்பண்ணை முதல் முராரி மருத்துவமனை ரயில் நிலையங்களிருந்து தபால் பெட்டி இரயில் நிலையம் முறையே   980 மீட்டர்  மற்றும் 684 மீட்டர்  இடைவெளியில் அமையவிருந்து... அதைப் போல  மீனாட்சி கல்லூரியும் கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து 725 மீட்டரிலும் அமையவிருந்தன.

1 கி.மீ தொலைவிற்கு இரயில் நிலையங்கள் கைவிட முடிவு

இவ்வாறு 6 இரயில் நிலையங்களும் 1 கி.மீ தொலைவிற்கு குறைவான இடைவெளியில் அமைக்க திட்டமிட்டபட்டிருந்த இரயில் நிலையங்களை    கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்....

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com