"வெள்ளிக்கிழமையும் தீபாவளி லீவா?" - 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான அறிவிப்பில் சொல்லப்பட்டது என்ன?

அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக நவம்பர் 28-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Diwali 2026 holidays
Diwali 2026 holidays
Published on: 
Updated on: 
1 min read

வருகின்ற நவம்பர் 8-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச நீதிமன்றங்களுக்கும் 2026 நவம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசு ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 9-ம் தேதி கூடுதல் விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தீபாவளி (நவ 08) மற்றும் தீபாவளிக்கு மறுநாள் (நவ 09) என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 28 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. தங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட வேண்டி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்ததையடுத்து, மாநில அரசு அக்டோபர் 28 அன்று இந்த முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Diwali 2026 holidays
Diwali 2026 holidays

இதனைத்தொடர்ந்து தற்போது, சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச நீதிமன்றங்களுக்கும் 2026 நவம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், தொடர்ந்து அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக நவம்பர் 28-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளை, கல்லூரிகள் மற்றும் அரசு நிலையங்களை தொடர்ந்து தற்போது சென்னை உயர் நீதிமன்றமும் தங்களுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 06, 07, 08 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.