தீபாவளிக்கு 2 நாள் லீவா? அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு முக்கிய அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
diwali holiday
Published on: 
Updated on: 
1 min read

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் தீபாவளிப் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு திரும்புவதற்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வசிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்புவதில் சிரமம் ஏற்படலாம் எனக் கருதப்பட்டது.

இதையடுத்து, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, நவம்பர் 9-ம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

தீபாவளிக்கு மறுநாள் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நவம்பர் 9-ம் தேதி விடுமுறை கிடைத்தாலும், அதற்குப் பதிலாக நவம்பர் 28-ம் தேதி பணிக்குச் செல்ல வேண்டியிருக்கும். தீபாவளி பண்டிகைக்காகப் புத்தாடைகள் வாங்குவது, சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வது என மக்கள் தயாராகி வரும் நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டுமின்றி, அதற்கு மறுநாளான திங்கட்கிழமையும் விடுமுறை கிடைத்துள்ளது. அதேசமயம், நவம்பர் 28-ம் தேதி வேலைநாள் என்பதை அரசு ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com