“நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்” - பதற்றத்தில் இருக்கும் அரசியல் காட்சிகள்… தமிழகத்தை ஆளப்போவது யார்?

இந்த முறை இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு சாயும்..
“நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்” - பதற்றத்தில் இருக்கும் அரசியல் காட்சிகள்… தமிழகத்தை ஆளப்போவது யார்?
Published on
Updated on
1 min read

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த பதற்றத்துடனும், எதிர்பார்ப்புடனும் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரங்கள், கூட்டங்கள், வாக்குறுதிகள் என அனைத்திற்கும் முடிவாக நாளை மக்கள் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில் கடந்த (ஏப் 23) ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போல அசாம், கேரளா, புதுச்சேரி மேற்கு வாங்கலாம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை (04.05.26) இந்த 5 மாவட்டங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் முக்கியமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகள் இதுவரை மோதி வந்த நிலையில், இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இதனுடன் பாஜக, காங்கிரஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்த முறை இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு சாயும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

மேலும் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு வெளியான எக்சிட் போல் (Exit Poll) கணிப்புகள் பல்வேறு முடிவுகளை சுட்டிக்காட்டுகின்றன. சில கணிப்புகள் திமுக கூட்டணிக்கு முன்னிலை என கூற, சிலர் அதிமுக கூட்டணி கடுமையான போட்டியை வழங்கும் என மதிப்பிட்டுள்ளனர். மேலும் ஒரு சில நிறுவனங்கள் விஜய்யின்  தமிழக வெற்றி கலக்கம் முன்னிலை வகிக்கும் என கூறியுள்ளது. அதே சமயம், சில எக்சிட் போல்கள் தொங்கு  சபை உருவாக வாய்ப்புள்ளது போல கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளனர். எனவே மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கையை சீராக நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையும் இணைந்து கண்காணிப்பு மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் CCTV கண்காணிப்பு மற்றும் இணையதள வழி நேரடி ஒளிபரப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT சீட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க, அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாதவாறு, மாநிலம் முழுவதும் கூடுதல் காவல் துறை படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com