தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கலக்கம் வெற்றி பெற்ற நிலையில் திமுக அடுத்த நிலை வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில் எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், மூத்த தலைவர்களான எஸ். பி வேலுமணி மாற்று சி.வி சண்முகம் தரப்பில் ஒரு அணியும் என அதிமுக இரண்டாக பிரிந்தது. இதில் எஸ். பி வேலுமணி தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். என இந்த பிரச்சனை பெரியதாகி எடப்பாடி எஸ்.பி வேலுமணி தரப்பினரின் கட்சி பதவிகளை பறித்து உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து மாறி மாறி இரு தரப்பினரும் சட்டமன்ற சபா நாயகர் ஜே.சி.டி பிரபாகரன் இடம் தனித்தனியா தங்கள் அணியை சேர்ந்தவர்களை கொறடாவாக நியமிக்க சொல்லு மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில் வேலுமணி அணியை சேர்ந்த 6 எம்.எல். ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் இரு தரப்பினரும் நிலைமை மோசமடைவதை தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினரும் சமரசம் பேசி ஒன்றிணைந்தனர்.
ஆனால் மீண்டும் தற்போது எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதாகவும், அந்த தோல்விகளுக்கான காரணங்களை சாதாரண தொண்டர்கள் கூட புரிந்துகொண்ட நிலையில், கட்சித் தலைமை அதனை உணரத் தவறிவிட்டதாகவும் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் தவித்து வருவதாகவும்குற்றம்சாட்டினார்.
மேலும், ஒருகாலத்தில் கருத்து தெரிவிக்கவும் கேள்வி எழுப்பவும் வாய்ப்பு இருந்த கட்சியில், தற்போது தலைமைக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் கருத்துகள் மட்டுமே கேட்கப்படுவதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், சில குறிப்பிட்ட நபர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.அதிமுகவில் நீண்டகாலமாக பணியாற்றிய பலரும் விரக்தியுடன் கட்சியை விட்டு விலகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறும் அனைவரையும் துரோகிகள் என சித்தரிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் கூறினார். கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் ஜனநாயகக் கொள்கைகளுக்கு மாறாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதேபோல், திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் குறித்து பேசப்பட்ட காலகட்டத்திலிருந்தே அதிமுக தனது தனித்துவமான அரசியல் அடையாளத்தை இழக்கத் தொடங்கியதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். அரசியல் வரலாற்றில் கருத்து வேறுபாடு காரணமாக கட்சிகளை விட்டு வெளியேறிய தலைவர்களை துரோகிகள் என்று அழைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலில் பாமக கூட்டணியின் பங்களிப்பும் அதிமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறிய அவர், அந்த கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் கட்சியின் வெற்றி எண்ணிக்கை மேலும் குறைந்திருக்க வாய்ப்பு இருந்ததாக தெரிவித்தார். தற்போது அதிமுக மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்து வருவதாகவும், தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் சிலரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.
மேலும், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், தலைமையின் செயல்பாடுகள் குறித்து அடிப்படைத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் சி.வி.சண்முகம் கூறினார். அவரது இந்த கருத்துகள் அதிமுக வட்டாரங்களில் புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அதிமுகவில் இருந்து சி.வி சண்முகம் விலகுவர் அல்லது தொடர்ந்து கட்சியுடன் பயணம் செய்வாரா என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.