அதிமுகவினருக்கு திறக்கப்பட்ட வாசல்..! ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. “இப்போ பாஜக உள்ள வரப்போகுது”

திமுக ஆட்சிக்காலத்தில் நிறைய பெரும் தவறுகளை செய்துள்ளது. ஆட்சி அமைத்ததிலிருந்து....
mkstalin vs edapadi palani samy
mkstalin vs edapadi palani samy
Published on
Updated on
2 min read

விஜய் கட்சி துவங்கிய நாளிலிருந்தே அவருக்கான ஆதரவும், ரசிகர் கூட்டமும் பெருகி வழியத்துவங்கியது. விஜய் சில முக்கியமான இடங்களில் அரசியல்வாதியாக கோட்டை விட்டாரா? என்றால், ஆம் உண்மைதான். அதற்கு காரணம் அவர்கள் புதியவர்கள் அரசியலுக்கு பழக்கமில்லாதவர்கள், மேலும் அரசியல்மயப்படாத தொண்டர்களை வைத்திருப்பவர்கள். ‘தவறி ஒரு முறை செய்தால் தான் அது தவறு.. மீண்டும் மீண்டும் செய்தால்..” அதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ஆனால் அவரின் அரசியல் பிரவேசத்தால் 41 -உயிர்கள் பலியானது என்ற உண்மையை இனி யாராலும் மாற்ற முடியாது. ஆனாலும் மக்கள் விஜய் மீது அதிகளவிலான வெறுப்புணர்வை உமிழவில்லை என்றுதான் தோன்றுகிறது. மேலும் இன்னமும் விஜயை பின்தொடரும் இளைஞர்கள் இருக்கின்றனர். அதுவே அவரின் மிகப்பெரும் பலம்.

திமுக ஆட்சிக்காலத்தில் நிறைய பெரும் தவறுகளை செய்துள்ளது. ஆட்சி அமைத்ததிலிருந்து, ஊழல், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள், காவல் மரணங்கள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக திமுக -வின் இமேஜை வெகுவாக உடைத்த ஒரு நிகழ்வு என்றால் அது ‘தூய்மை பணியாளர் போராட்டம் தான்” சென்னை திமுக -வின் கோட்டை என்று அறியப்படும் பகுதியாகும்.ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் திமுக மீதான தங்கள் வெறுப்பை வாக்குகளில் காட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

அடுத்ததாக அதிமுக -பாஜக கூட்டணி ஒருவேளை அதிமுக - தவெக கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர் சிலர். ஆனால் அது எடப்பாடியின் முடிவு மட்டுமல்ல அமித்ஷா -வின் முடிவும் கூடத்தான் அதிமுக - பாஜக -வின் பிடியில் உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. 

இப்படி ஒரு தனித்துவமான தேர்தல் களத்தை தமிழ்நாடு இதற்கு முன்பு கண்டுள்ளதா என தெரியவில்லை. இதற்கு இடையில்தான் திமுக -விற்கு சாதகமான ஒரு கருத்து கணிப்பை ‘The Print’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. 

என்னதான் அதிமுக -திமுக எதிர்ப்பு அரசியலை செய்து வந்தாலும், இரு கட்சிகளும் பிராந்திய காட்சிகள். மாநிலத்தின் உரிமையை, தனித்தன்மையை நிலைநாட்டிய கட்சிகள், அதற்கு கடந்த கால வரலாறு உண்டு. ஆனால் பாஜக பிராந்திய கட்சி இல்லை என்பதை தாண்டி தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான சித்தாந்தங்களை கொண்ட கட்சி என்பது தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் 70 -களிலிருந்து பாஜக மீதான எதிர்ப்பை வைத்தே தமிழக அரசியல் சூழல் இயங்கி வந்துள்ளது. திமுக அழிந்தாலும், அதிமுக அழிந்தாலும் அது இருபக்கமும் சேதாரம்தான். எப்பவாவது திமுக -வினர் சிலர் அதிமுக -விழும், அதிமுக -வினர் சிலர் திமுக -விழும் இணைவது வழக்கம். அது வெறும் மிரட்டும் தொநொய்யில் மட்டுமே இருக்கும். எதிர்க்கட்சியை காலி செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் இருக்காது.  அந்த conern ஜெயலலிதா, கலைஞர், ஏன் சமீபத்தில் வரை ஸ்டாலினிடமும் இருந்தது. 

பிரபல தமிழ் வார இதழ் தற்போது ஸ்டாலினிடம் இருந்த  ‘அந்த conern’ போய்விட்டது, அதிமுக -விலிருந்து யாரேனும் வந்தால் திமுக அவர்களை சேர்த்துக்கொள்ள தயாராக உள்ளது, என ஸ்டாலின் முடிவு எடுத்துவிட்டதாக எழுதியுள்ளது. இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “ஆம் அப்படி செய்திகள் வெளியாவது உண்மைதான். அவர்கள் எதிரணியில் ஒரு பிராந்திய காட்சியைத்தான் ஏற்றுக்கொள்வார்கள். திராவிட சித்தாந்தத்தை பேசும் கட்சியை தான் திமுக ஏற்கும். ஒருவேளை வருங்காலங்களில் அதிமுக -வை கபளீகரம் செய்துவிட்டு, பாஜக எதிரணி ஆனால் அதை ஒருபோதும் திமுங்க ஏற்காது.

அதனால்தான்,  அதிமுக தொண்டர்கள் திமுக -உடன் சேர்ந்துகொள்ள வாய்ப்பு உண்டு என சொல்லாமல் சொல்கிறார்கள். எடப்பாடி அரசியலில் தனது பிடிவாதத்தை சில சமயங்களில் கைவிட வேண்டும்” என அவர் பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com