மதுரை திருபுவனத்தில் போலீசார் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்தை, போலீசார் நதியா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்திய போது தான் இந்த கோர சம்பவம் அரங்கேறியது. கோவிலுக்கு வந்த போது தனது காரில் இருந்த 10 சவரன் நகை காணாமல் போனதாகவும் காரை பார்க்க செய்ய அஜித்திடம் சாவியை கொடுத்தேன் எனவும் நதியா புகாரில் தெரிவித்திருந்தார்.
தற்போது விசாரணை நடத்தியபோது அஜித் உயிரிழந்ததை அடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர். ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது அஜித்தின் மீது குற்றம் சாட்டிய நதியா என்பவர் மீது ஏற்கனவே 2010 -ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வெளியாகியுள்ளது.
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி நதியா பலரிடம் 16 லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றியதற்கு நதியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தியை கேட்ட பலரும் உண்மையாகவே நதியாவின் நகை காணாமல் தான் போனதா? இல்லை நாடகமாடினாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.