
கரூரில் நடந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது, விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 -பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது விமர்சனகளை முன் வைத்துள்ளனர். அதில் சிலர் விஜய் தரப்பில் இருந்து யாரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வில்லை தங்களது வருத்தத்தை கூட தெரிவிக்கவில்லை என விமர்சித்து வந்த நிலையில் நேற்று விஜய் தனது சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டையும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனன் தனது வலைதள பக்கத்தில் “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.
துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்இறுதியில் தர்மமே வெல்லும்!' “ என பதிவிட்டு தனது வருத்தத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் உறுதுணையாக இருப்பேன் உணவு தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.