
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.
ஆனால் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ -க்கு மாற்றப்பட்டுள்ளது. இது திமுக -விற்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் களம் புதுப்புது பரிணாமங்களை கடந்து வருகிறது.
இந்த அமளிகள் நடந்துகொண்டிருக்கும்போதுதான் ‘எடப்பாடி -யின் பிரச்சார கூட்டத்தில் பறந்துகொண்டிருந்த தவெக கொடியை பார்த்து, ‘பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க… யாரும் எதிர்பார்க்காத கூட்டணி அமையும்’ என பேசியிருந்தது, விஜய் -ன் தேவை இன்னும் அதிமுக -விற்கு இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
ஆனால் விஜய் அவர்களின் அழைப்புக்கு இதுவரை எந்த பதிலும் பேசாமல் தான் இருந்து வருகிறார். ஆனால் கூட்டணி குறித்து பொங்கல் முடிந்த பின்னரே தெரிய வரும் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை அதிமுக உடன் விஜய் இணைகிறார் என்றால், அது தவெக தலைமையிலான கூட்டணியாகத்தான் இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் சிலர் கணிக்கின்றனர்.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் நேற்று நடந்த சட்டப்பேரவையில், “தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் மரணங்களை தவிர்த்திருக்கலாம், வேலுச்சாமிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு மட்டும் அந்த பகுதியில் அனுமதி அளித்தது ஏன்?" என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு, "தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால்கூட இப்படி ஒரு போர்க்குரல் அவர்களிடமிருந்து வந்திருக்குமா எனத் தெரியவில்லை. கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், இன்று ஈபிஎஸ் அப்படி பேசியிருக்கிறார்” என முதல்வர் பேரவையில் பதிலளித்தார்.
மேலும் நெடுங்காலமாக அதிமுக -வினரும் விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றே விரும்பினர். ஆனால் அது எடப்பாடி முடிவு மட்டுமல்ல அமித்ஷா -வின் முடிவு என்றும் சிலர் அப்போது விமர்சித்திருந்தனர். இந்த சூழலில் எடப்பாடிக்கு சாதகமாக எல்லாம் கூடி வந்துள்ளது. ஆனால் அதில் உள்ள மிகப்பெரும் சிக்கல் என்னவென்றால், பாஜக -தான் கொள்கை எதிரி என பலமுறை விஜய் சொல்லியுள்ளார். ஒருவேளை விஜய் பாஜக உடன் கரம்கோர்த்தால் அது நிச்சயம் மக்களிடையே நெருடலை ஏற்படுத்தக்கூடும். அதனால்தான், விஜய் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. அதற்கு மாற்று வழியாக எடப்பாடி பழனிச்சாமி பாஜக -வை கழற்றிவிட்டு விஜய் உடன், கூட்டணி வைப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தால்தான் என்னவென்று தெரியும் என்கின்றனர் சில ஆர்வலர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.