உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் நடிகர் ரஜினி காந்த்!!

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் நடிகர் ரஜினி காந்த்!!
Published on
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சிவ ராஜ்குமார், மோகன் லால், தமன்னா, யோகிபாபு, கிங்ஸ்லி மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே, நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். பின்னர்  ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்துள்ளார். 

அதை தொடர்ந்து ராம்கர் சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய ரஜினி, இன்று லக்னோ செல்லவுள்ளார். 

அங்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com