
இந்திய சினிமாவில் போதைப்பொருள் பயன்படுத்தி கைதாகும் வழக்கம் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் சமீபத்தில் தென்னிந்திய நடிகர்கள் பலரும் போதைப்பொருள் பயன்படுத்தி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு மலையாள சினிமாவின் முன்னை இயக்குனர்கள்,நடிகர்கள் பலரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 90 களின் இறுதியில் தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகனாக வலம் வந்த ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் தற்ப்போது சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ரோஜாக்கூட்டம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். அதிமுக ஐடி -விங்கிலிருந்து நீக்கப்பட்ட பிரசாத் என்பவரிடம் கடந்த 2023 -இலிருந்து கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை வாங்கி உபயோகித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த போதைப்பொருளை ஆப்பிரிக்காவிலிருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்த ஜானி என்ற நபரிடம் இருந்து பெற்றதாகவும் பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் கடத்தல்காரர் ஜானியையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் -க்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.