“தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது” - விஜய்க்கு நடிகர் சூர்யா பாராட்டு! திரையுலகின் வாழ்த்து மழையில் தவெக தலைவர்..

அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி
actor suriya praise vijay
Published on
Updated on
2 min read

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில்  போட்டியிட்டார். மேலும் விஜய்யின் தவெக 110 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறார். இது ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளது. மேலும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக தனி பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போது தவெக  தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் 88,744 வாக்குகளைப் பெற்று, 38,927 வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை உறுதி செய்துள்ளார். மேலும் அவர் போட்டியிட்ட மற்றொரு  தொகுதியான திருச்சியில் 62,057 வாக்குகளைப் பெற்று 20,394 வாக்குகள் முன்னிலையுடன் அங்கேயும் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இந்த மாபெரும் வெற்றியை திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்த நடிகர் அஜித்குமார், தவெக தலைவர் விஜய்யின் வெற்றிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதனையடுத்து நடிகர் சூர்யா, “மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது” என்றும் “தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என்றும் X தளத்தில் பதிவிட்டு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

அதையடுத்து நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்திக் “மனமார்ந்த வாழ்த்துக்கள், விஜய் சார்! மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அளவற்ற அன்பும் நம்பிக்கையும் ஒரு உண்மையான வரலாற்று வெற்றியை அளித்துள்ளது” என்றும் நமது மக்களுக்கான உங்கள் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றும் வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

அதையடுத்து நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் “தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையை பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்” தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தவெக தலைவர் விஜய்க்கு தெரிவித்தார்.

இசையமைப்பாளர் AR. ரஹ்மான் அவர்கள் தவெக கட்சிக்கும் தலைவருக்கும் வாழ்த்துக்களை பதிவு செய்தார். “பெரும்பான்மையை வென்ற  தமிழக வெற்றி கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!” என்றும் “அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர, வளர வாழ்த்துக்கள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும் கொண்டாடும்.” அவருக்கு சில முக்கிய அரசியல் கூறுகளை குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதையடுத்து நடிகர் சிலம்பரசன், “ வரலாறு தானாக நிகழவில்லை, அது அதற்கான தருணத்தை தேர்ந்தெடுத்துள்ளது” என்றும் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!” என்றும் பதிவிட்டு விஜயின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com