
2026 தேர்தல் உண்மையில் இன்னும் 10 மாதங்களுக்கு தமிழ் நாடு அல்லோலப்படும் என்பதில் ஐயமில்லை. “எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான் “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான். ஆனால் அதிமுக விற்கு அது பேரழிவு என்கின்றனர் ஆர்வலர் பலர்.
ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை என்று சொல்லி வந்த நிலையில் தற்போது அதிமுக -வின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அன்வர் ராஜா அறிவாலயம் சென்ற உடனேயே அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி, பல பெரிய தலைவர்களும் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எடப்பாடி பேச்சு!
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக சுற்றுப்பயணத்தின்போது எடப்பாடி பழனி சாமி “ அதிமுக ஒன்றும் ஏமாளி அல்ல. பாஜக -உடன் கூட்டணிதான் என்றெல்லாம் சொல்லவில்லை என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்துக்காக பேட்டியளித்த அய்யநாதன் “அண்ணாமலை பெரும் உத்வேகத்துடன் பாஜக -விற்காக வேலை பார்த்தார். மைனஸ் -இல் இருந்த பாஜக வின் ஒட்டு வங்கியை 11% -க்கு கொண்டு வந்து நிறுத்தியவர் அண்ணாமலைதான். ஆனால் பாஜக தலைமை அவருக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக இருக்கவில்லை. எவ்வளோவோ விமர்சனங்கள் இருந்தாலும் ஒருபோதும் அண்ணாமலை கட்சிக்காக்க உழைக்க தவறவில்லை. அதிமுக -வை கடுமையாக சாடியவர் அண்ணாமலைதான். வருகிற 2029 -தேர்தல் பாஜக -வின் . அவர்களை எப்போதும் உடனடி வெற்றியை விவரம்புபவர்கள் அல்ல. நீடித்த வெற்றியை விருப்பக்கூடியவர்.அதற்ககாதான் அண்ணாமலை வெளியற்றப்பட்டார். அண்ணாமலையை வெளியற்றி அதிமுக -வை தன்னுடன் இணைத்து கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை விழுங்கிக்கொண்டிருக்கிறது பாஜக. இது அனைவருக்குமே வெளிப்படையாக தெரிகிறது. அவர்கள் அண்ணாமலையை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். அவரின் தேவை தீர்ந்ததும் அவரை தூக்கி எறிந்துவிட்டனர். தனது வெற்றிக்காக பாஜக தலைமை எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இதுதான் உதாரணம். நயினார் போன்ற ஆட்களெல்லாம் கைப்பவைதான் பாஜக -விற்கு. என்ன இப்படி பேசுகிறேன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.அதுதான் உண்மை.” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.