"சோப்ளாங்கி ஆட்சியில்.. inky pinky ponky போட்டு.." தேனியைத் தொடர்ந்து கோவை சிறையிலும் எஸ்கேப்பான கைதி! ஆவேசமான உதயநிதி

அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
- Udhayanidhi Stalin
- Udhayanidhi Stalin
Published on: 
Updated on: 
1 min read

தேனி சிறையில் இருந் 17 கைதிகள் சமீபத்தில் வலிப்பு வந்ததுபோல் நடித்து தப்பி ஓடிய நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் சமீபத்தில் வலிப்பு வந்ததுபோல் நடித்து தப்பி ஓடியது தமிழகம் என்றும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், அவர்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். தற்போது, கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பி ஓடியுள்ளார். வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க சோதனை மேற்கொண்டபோது இவர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சிறை வளாகத்தில் இருந்து ராகவன் (30) என்ற கைதி தப்பிய நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக கூறி 4 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர், "இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.

இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும். 'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், அடுத்தடுத்து கைதிகள் தப்பி ஓடுவது, கொலைகள் நடப்பது, குழந்தைகள் மாயமாவது போன்ற அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் இடைவெளி இன்றி அடுத்தடுத்து நடப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் 'ஆளும் அரசின் அலட்சிய போக்கினை' கண்டித்தும் தங்களது எதிர்ப்புக்குரல்களை பதிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து கைதிகள் தப்பி ஓடுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.