Udhayanidhi Arrest: "இந்த கைதை காமடியாக பார்க்கிறேன்" - உதயநிதி பேசியது என்ன?

இந்த அரசு அமைந்து 2 ஆண்டுகளில் கட், காப்பி, பேஸ்ட் செய்வதிலும் ஃபேக் ரீலஸ் பரப்புவதிலும் தான் சிறப்பாக செயல்படுகின்றனர்.
udhayanithi stalin claims fake case, cut copy paste video
udhayanithi stalin claims fake case, cut copy paste video malai murasu
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை வாகனத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தக் கைதை காமெடியாகப் பார்க்கிறேன். இவர்களுக்கு அறிவு இல்லை. முட்டாள் கூட்டம்." எனக் கூறினார்.

மேலும், தனது பேச்சு வெட்டி ஒட்டப்பட்டதாகவும், தஞ்சாவூரில் தான் பேசியதை மடைமாற்றும் நோக்கில் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, "கிட்டத்தட்ட 22 நிமிடங்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். இந்த அரசு விவசாயிகளை எப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறது, தேர்தல் வாக்குறுதியில் சொன்னவற்றை எப்படி நிறைவேற்றவில்லை, மேகதாது அணையைக் கட்டுவதை எதிர்க்க திராணியற்ற அரசாக எப்படி இருக்கிறது என்பது பற்றியெல்லாம் முதலமைச்சர் பேச வேண்டும். எங்கள் தலைவர் எப்படி விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதையும் பேசியிருந்தேன். அதையெல்லாம் மறைத்துவிட்டார்கள்.

அதற்காக நான் பேசாததைப் பேசியதுபோல் கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய்ச் செய்தி பரப்புகின்றனர். இந்த அரசு அமைந்து 2 ஆண்டுகளில் கட், காப்பி, பேஸ்ட் செய்வதிலும், ஃபேக் ரீல்ஸ் பரப்புவதிலும் தான் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொய் வழக்குப் பதிவு செய்து என்னைக் கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் இல்லை. இதை சட்டப்படி சந்திப்பேன்." என்றார்.

udhayanithi stalin claims fake case, cut copy paste video
Breaking: "உதயநிதி ஸ்டாலின் கைது!" சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கும் நிலையில் போலீசார் அதிரடி - தஞ்சாவூரில் விசாரணையா?
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com