“297 அறிவிப்புகளை வெளியிட்ட அதிமுக” - மாதந்தோறும் 'இல்லத்தரசிகளுக்கு 2000 உதவித்தொகை'... சூடு பிடித்த தேர்தல் களம்!

இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நேரடி நிதி உதவி வழங்கப்படும்...
“297 அறிவிப்புகளை வெளியிட்ட அதிமுக” - மாதந்தோறும் 'இல்லத்தரசிகளுக்கு 2000 உதவித்தொகை'... சூடு பிடித்த தேர்தல் களம்!
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு அடுத்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே  உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கான தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே மூன்று கட்டமாக தேர்தல் அறிக்கைகளை வெளியிடப்பட்ட நிலையில் இன்று 297 அறிக்கைகளை முழுமையாக வெளியிட்டிருக்கிறார். இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நேரடி நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவி பெண்களுக்கு மாதந்தோறும் ₹2000 வழங்கும் திட்டம், பெண்களின் பொருளாதார சுயநிறைவை உறுதிப்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி வழங்கும் திட்டம், அனைவருக்கும் பாதுகாப்பான குடியிருப்பு வழங்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் உதவித்தொகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.விவசாயத் துறையில், கடன் தள்ளுபடி, MSP உயர்வு மற்றும் ₹15,000 நிதியுதவி போன்ற திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில், அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதுடன், கிராமப்புறங்களுக்கும் மருத்துவ சேவைகள் விரிவாக்கப்படும்.

கல்வி துறையில், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இணைய வசதி மற்றும் உயர்கல்விக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களும் வலுப்படுத்தியுள்ளதா தெரிவித்துள்ளனர். பெண்கள் தொழில் தொடங்க வட்டி இல்லா கடன், பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் சிறு வியாபாரிகளுக்கான நிதி உதவி போன்ற திட்டங்கள் சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும். மேலும், அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்வி விரிவாக்கம் போன்ற கூடுதல் முயற்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழு தேர்தல் அறிக்கையை தெரிந்து கொள்ள கீழே இணைத்துள்ள உள்ள கோப்பை படிக்கவும்

Attachment
PDF
4. AIADMK Election Manifesto - Assembly General Election - 2026
Preview

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com