இடைத்தேர்தல் களம்.. SP வேலுமணி, CV சண்முகத்தை ஒதுக்கும் அதிமுக? தொண்டர்கள் அதிருப்தி

வெளியாகியிருக்கும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் களம்.. SP வேலுமணி, CV சண்முகத்தை ஒதுக்கும் அதிமுக? தொண்டர்கள் அதிருப்தி
இடைத்தேர்தல் களம்.. SP வேலுமணி, CV சண்முகத்தை ஒதுக்கும் அதிமுக? தொண்டர்கள் அதிருப்திAI Generated
Published on
Updated on
1 min read

இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள் மற்றும் நாதக என ஐந்துமுனைப் போட்டி நடைபெற உள்ளது.

இரண்டு தொகுதிகளும் ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்தான் என்றாலும், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வேறு கட்சியின் சார்பில் போட்டியிடுவதாலும், இடைத்தேர்தல்கள் பொதுவாக ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், அதிமுக பிரசாரத்தில் கடினமாகப் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது.

இந்த நிலையில் வெளியாகியிருக்கும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளில் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட பிறகு, அதிமுக பல குழப்பங்களைச் சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளுக்கு எதிராக கோஷ்டிகள் எழுந்தன. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.சி. வீரமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தனர்.

வேலுமணியும், சண்முகமும் மீண்டும் அதிமுகவில் பணிகளைத் தொடர்ந்தாலும், அவர்களது மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்படவில்லை. தற்போது, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும் அவர்களது பெயர்கள் இல்லை. இது அவர்களது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுக தொண்டர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதியில் மக்களால் அறியப்பட்ட தலைவர்களுள் ஒருவர் எஸ்.பி. வேலுமணி. அவரது பிரசாரம் தேர்தல் வெற்றியில் கணிசமாகப் பங்களிக்க முடியும் என்பது அதிமுகவினரின் நம்பிக்கை.

தாராபுரத்தில் திமுக புதிய வேட்பாளரையே நிறுத்தியிருக்கிறது. இதனால், தவெக மற்றும் சத்யபாமாவுக்கு எதிரான அலையை உருவாக்கினால், அதிமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உருவாகும். ஆனால், பழக்கப்பட்ட தலைவரை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி ரிஸ்க் எடுப்பதை தொண்டர்கள் ரசிக்கவில்லை.

இதேபோல், சி.வி. சண்முகம் மதுராந்தகம் தொகுதியில் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளார். அவரும் நட்சத்திர பேச்சாளராக இடம்பெறவில்லை.

இடைத்தேர்தல் வந்தால் தலைவர்கள் அனைவரும் மாற்றுக் கருத்துகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்த தொண்டர்கள், இந்த நடவடிக்கைகளால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இடைத்தேர்தல் களம்.. SP வேலுமணி, CV சண்முகத்தை ஒதுக்கும் அதிமுக? தொண்டர்கள் அதிருப்தி
DMK: தவெக அலையால் மாற்றங்களை சந்திக்கும் எதிர்க்கட்சி; அதிமுக, பாமக, விசிக செய்ய வேண்டியது என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com