ஏற்கனவே நொந்து போயிருக்கும் விஜய்க்கு.. கூராய் இறங்கிய அஜித்தின் "அந்த" ஒரு வார்த்தை..!

அஜித் குமாரின் பேச்சு மிகவும் கவனிக்கப்படத்தக்க ஒன்று, தனது நேர்காணலில் ‘Collective Failure’ என்ற ஒரு ...
ajith vs vijay
ajith vs vijay
Published on
Updated on
2 min read

தமிழகத்தின் இரண்டு முக்கிய சினிமா முகங்கள் என்றால் அது, விஜய்யும் அஜித்தும் தான் பல சகாப்தங்களாக தமிழ் திரையுலகின் இவர்கள் இருவரின் கையும் தான் ஓங்கி உள்ளது. இரண்டு மிகப்பெரும் நட்சத்திரங்கள் ஒருசேர வளரும்போது,  போட்டி மனப்பான்மையும் உடனே வளரும்.  ஒருவேளை அது சம்மந்தப்பட்ட நடிகர்களுக்கு இடையே இல்லாவிட்டாலும், ரசிகர்களுக்கிடையில் நிச்சயம் வளரும். அப்படி உருவாகி தமிழ்ச் சூழலில் நிலைத்து நின்றுவிட்ட ஒருபதம்தான் ‘தல தளபதி’ என்ற சொல்லாடல்.

ஆனால் ரஜினி கமல் போல் அல்லாமல் அஜித்தும் விஜயும் தங்களுக்கான இருவேறு பாதைகளை அவர்களே தேர்வு செய்துகொண்டனர். கார் ரேஸிங் மீது பெரு விருப்பம் கொண்ட அஜித் தற்போது முழுக்க முழக்க அதிலேதான் கவனத்தை செலுத்தி வருகிறார். Porsche 911 GT3 RS, Mercedes-AMG GT3 உள்ளிட்ட கார்களை தற்போது அஜித் ஒட்டி வருகிறார். Ajith Kumar Racing என்ற ரேஸிங் குழுவையும் வைத்துள்ளார். 

அவரின் போட்டியாளராகவும் நண்பராகவும் அறியப்பட்ட விஜய் “தமிழக அரசியலில் நுழைந்துவிட்டார்” இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை உருவாக்கி 2 மாநில மாநாடுகளை நடத்தி தமிழக அரசியலில் மறுக்கமுடியாத ஒரு ஆளுமையாக வளர்த்துள்ளார். ஆனால் அவரின் கட்சி செய்லபாடுகள் ஆரம்பத்திலிருந்தே விமர்சிக்கப்பட்டது. அவர் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல. அவர் Work From Home அரசியல் செய்கிறார். அவரிடம் கொள்கை தெளிவு இல்லை என பல விஷயங்களை விமர்சகர்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். 

கரூர் வேலுச்சாமி புரத்தில் செப் 27 அன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடந்த பரப்புரையின் போது வழக்கத்திற்கு மாறாக விஜயை பார்க்க அதிக மக்கள் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில், 41 பேர் மூச்சுத்திணறியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். இந்த சம்பவ தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். மேலும் இது குறித்து காணொளி மூலம் தனது வருத்தத்தை தெரிவித்திருந்ததார் தவெக தலைவர் விஜய்.

கரூர் சம்பவம் குறித்து அஜித் பேச்சு 

இந்த நிலையில்தான் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித் குமார்   தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். தனது வாழ்வின் பல நிலைகள் குறித்த விரிவான பேட்டியாக அது அமைந்துள்ளது. மேலும், அஜித் விஜய் போல் அல்லாமல் தனது ரசிகர்களிடம் இருந்தும் பொது வெளியில் இருந்தும் ஒரு ஆரோக்கியமான இடைவெளியில் வாழ்ந்து வருகிறார். அது ஏன் என்பது குறித்தும் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார், அவர் அந்த நேர்காணலில், “நான் பல பொதுவெளி நிகழ்வுகளில் சில கசப்பான தருணங்களை கடந்து வந்திருக்கிறேன். நான் ஒரு முறை வாக்களிக்க சென்றபோது, அங்கே என்னை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர், மேலும் அது ஒரு வாக்குச்சாவடி அங்கே  புகைப்படம் எடுக்க அனுமதியும் இல்லை.  ஆனாலும் ஒருவர் என்னை படம்பிடிக்க முயன்றார், உடனே அவர் கையிலிருந்த போனை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. உடனே பல மீடியாக்கள்  ‘என்னை ஒரு திமிர் பிடித்த நபர் போல சித்தரித்தனர்” ஒரு வாக்குச்சாவடியில் என் ரசிகராக இருந்தாலும், யாரும் செய்யக்கூடாத ஒன்றை செய்யும் ஒருவரை நான் தடுத்தேன். ஒரு பொதுவெளியில் ஒழுக்க நெறிமுறை என்பது எல்லாருக்கும் பொதுவானது.  குறிப்பாக ஊடகங்களுக்கு. மேலும் திரையரங்குகளில் எந்த ஹீரோவுக்கு பெரிய ஓப்பனிங் என்பது பெருமையாக பார்க்கப்படுகிறது. அது தேவையற்ற பகையை உருவாக்குகிறது. மேலும் சமீபத்தில் நடந்த கரூர் துயரம் ஒரு ‘Collective Failure’ தனிநபர் மட்டுமல்ல நாம் அனைவரும் அதில் பொறுப்பேற்க வேண்டும். கூட்டத்தை கூட்டுவதை பெருமை என நினையாகும் அதீத சமூசாகமாக இன்று நம் மாறியிருக்கோம்” என அவர் பேசியுள்ளார்.

பொறுப்பேற்காத விஜய் 

அஜித் குமாரின் பேச்சு மிகவும் கவனிக்கப்படத்தக்க ஒன்று, தனது நேர்காணலில் ‘Collective Failure’ என்ற ஒரு வார்த்தையை அவர் உபயோகப்படுத்தியுள்ளார். தான் உட்பட கரூர் துயரத்திற்கு காரணம் என அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் உட்பட அனைவரும் தங்கள் பொறுப்பினை துறந்தனர் என்பதை நன்கறிவோம். மேலும் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து அவர் பேசிய வீடியோவில் கூட அரசையும், போலீசையும்தான் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுவரை விஜய் பொதுவெளியில் மன்னிப்புகூட கோரவில்லை. இந்நிலையில் இதற்கு ‘சமூகமாக நாம் என்ன உளவியலில்’ வாழ்கிறோம் என்பதை அஜித் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com