“இக்கட்டான நேரங்களில் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல" - காங்கிரஸை கடுமையாக சாடிய அகிலேஷ் யாதவ்! மொத்தமாக உடைகிறதா இந்தியா கூட்டணி?

இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிகிறது
Akhilesh Yadav
அகிலேஷ் யாதவ்
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநிலத்தில் மட்டுமல்ல இனிய அளவில் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 118 என்னும் தனி பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறாத நிலையில், 107 தொகுதிகளை விஜயின் தமிழக வெற்றி கழகம் கைப்பற்றியுள்ளது. ஆனாலும் தெளிவான பெரும்பான்மை இல்லாதது, தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்டமான தேர்தல் வெற்றிக்கு ஒரு பெரும் தடையாக உள்ளதுடன், தமிழகத்தில் அரசாங்கம் அமைப்பதிலும் தடுமாற்றத்தை கொண்டுள்ளது.

பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால் மட்டுமே விஜய் பதவியேற்க முடியும் என தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜயை பதவி ஏற்க இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. விஜய் தலைமையிலான தவெக கட்சியானது, தோற்கடிக்கப்பட்ட திமுகவின் கொள்கை கூட்டணியாக இருந்த மற்ற காட்சிகளின் ஆதரவை அணுகியது. அதில் முக்கிய அங்கமாக இருந் காங்கிரஸ் கட்சி திமுக உடனான 22  வருட கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுடன் கைகோர்த்துள்ளது. இதனால் தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாகி வரும் நிலையில், படுதோல்விக்கு பிறகு தனது நிரந்தர கூட்டணியாக இருந்த திமுகவைக் கைவிட்டதற்காக, காங்கிரஸ் கட்சி மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து விமர்சனத்தை  எதிர்கொண்டு வருகிறது.

அந்த வைகையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று காலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியை இழந்த அரசியல் தலைவர்களான மம்தா பானர்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, "இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ் கட்சியும் தேசிய அளவில் காங்கிரஸின் கூட்டணியாகும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி முகாமின் ஒரு பகுதியாக இருப்பதால், அவர் பானர்ஜி, ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவை ஏற்படுத்தி வந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய கூட்டணி மாற்றத்திற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள், விமர்சித்தும் எதிர் கருத்தை தொடர்ந்து பதிவிட்டும் வருகிறார்கள். இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிகிறது.

தவெக-விற்கு காங்கிரஸின் ஆதரவு இருந்தபோதிலும், 118 என்ற எண்ணிக்கையை எட்டவில்லை. 112 என்ற எண்ணிக்கையுடன், தவெக கட்சியானது விசிக (2), சிபிஐ (2), மற்றும் சிபிஎம் (4) ஆகிய கட்சிகளையும் அணுகியுள்ளது. திமுக-வின் கூட்டணி கட்சிகளான இவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கும் என அனைத்து கட்சிகளும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது. அந்த நிலையில் நாளை விசிக அறிவிக்கும் என தெரிவித்திருந்தது, இன்று சிபிஐ மாற்று,ம் சிபிஎம் தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com