``ரொம்ப எதிர்பாக்காதீங்க" அக்வான் புயலும் 'ஆந்திரா' செல்கிறதா? சென்னைக்கு என்ன நிலை - வானிலை ஆய்வாளர் கருத்து!

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் அக்வான் புயல், நாளை மாலை தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclone Akvan Updates
``ரொம்ப எதிர்பாக்காதீங்க" அக்வான் புயலும் 'ஆந்திரா' செல்கிறதா? சென்னைக்கு என்ன நிலை - வானிலை ஆய்வாளர் கருத்து!
Published on: 
Updated on: 
1 min read

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘அக்வான்’ (Akvan) எனப் பெயரிடப்பட்ட புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல், மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 660 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக காரைக்கால் கடற்கரையில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் அக்வான் புயல், நாளை மாலை தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 19-ம் தேதி காலை மிக தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நவம்பர் 20-ம் தேதி நண்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் – துனி இடையே, யானம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் மிக தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 145 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் ஓடிஷா அல்லது ஆந்திரா பக்கமாக செல்லவே அதிக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். எனவே 'அதிக மழையை எதிர்பார்க்காதீங்க' என்றும் 'முரசு புயல் அளவு மழைப் பொழிவு இருந்தாலே சிறப்பானதாக இருக்கும்' என்றும் கூறியுள்ளார்.

எனவே புயல் தெற்கு ஆந்திரா பக்கம் வந்தால் சென்னைக்கு 19ம் தேதி கனமழை. அதைவிட வடக்கே சென்றுவிட்டால் லேசான மழைபொழிவு அல்லது எதுவும் இல்லாமல் கூட போகலாம்.

Cyclone Akvan Updates
கைது செய்யப்பட்டார் 'அகல்விளக்கு' மோகன்.. FIR-ல் ரகசிய அதிகாரிகள்.. புட்டு புட்டு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.