கைது செய்யப்பட்டார் 'அகல்விளக்கு' மோகன்.. FIR-ல் ரகசிய அதிகாரிகள்.. புட்டு புட்டு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-ன் கீழ் கூட்டுச்சதி, நம்பிக்கை துரோகம், மோசடி, ஆவணத் திருத்தம் ஆகிய பிரிவுகளிலும், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பதிப்புரிமைச் சட்டம் (1957) ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
DVAC Arrests 'Agal Vilakku' Publisher Mohan Over Rs 1.74 Crore Tamil Nadu Library Book Scam
கைது செய்யப்பட்டார் 'அகல்விளக்கு' மோகன்.. FIR-ல் ரகசிய அதிகாரிகள்.. புட்டு புட்டு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!
Published on: 
Updated on: 
2 min read

அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் மற்றும் பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

அந்த FIR-ல் 'அகல் விளக்கு பதிப்பகம்' மற்றும் 'பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர் ஆர். மோகன் மற்றும் பொது நூலகத் துறை, அண்ணா நூற்றாண்டு நூலகம், பெரியார் அறிவுலகம் ஆகியவற்றின் அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் மீது கூட்டுச்சதி, மோசடி, ஆவணத் திருத்தம் மற்றும் பதிப்புரிமைச் சட்ட மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை செயலாளரின் கடிதம் (06.11.2026) மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் (10.11.2026) பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விரிவான விசாரணை நடத்தி, 15.11.2026 அன்று இரவு 7.00 மணிக்கு வழக்குப் பதிவு செய்துள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-ன் கீழ் கூட்டுச்சதி, நம்பிக்கை துரோகம், மோசடி, ஆவணத் திருத்தம் ஆகிய பிரிவுகளிலும், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பதிப்புரிமைச் சட்டம் (1957) ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் FIR கூறுவதன்படி, ஆர். மோகன் ஒரே முகவரியிலிருந்து (மடிப்பாக்கம், சென்னை) 'அகல் விளக்கு பதிப்பகம்' (2,339 தலைப்புகள்) மற்றும் 'பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ்' (99 தலைப்புகள்) ஆகிய பெயர்களில் புத்தகப் பட்டியல்களை அனுப்பியுள்ளார். இதில் 1,857 புத்தகங்களுக்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, புத்தகங்கள் பெறப்பட்டன.

புத்தகப் பரிந்துரைக் குழு சுமார் 26,000 புத்தகங்களைப் பரிந்துரைத்த நிலையில், அக்குழுவால் பரிந்துரைக்கப்படாத பல புத்தகங்களை ஒருங்கிணைப்புக் குழு தன்னிச்சையாகச் சேர்த்து புத்தகத் தேர்வுக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வக் குறிப்புக் கோப்பில் (Note file) எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

DVAC Arrests 'Agal Vilakku' Publisher Mohan Over Rs 1.74 Crore Tamil Nadu Library Book Scam
"திமுக மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.. நாட்டின் முதல் AI ஊழல்" - ஆதாரங்களை புட்டு புட்டு வைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

உயர்மட்டக் குழு புத்தகப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்த நாளான 05.02.2026 அன்று மட்டும் 48 புத்தகங்களுக்கு ISBN எண்கள் பெறப்பட்டுள்ளன. ஒரே எழுத்தாளர் பெயரில் நூற்றுக்கணக்கான தொடர்பில்லாத புத்தகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு வெளிநாட்டு எழுத்தாளர்கள் பெயரில் போலியான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. போலி இணையதள முகவரியுடன் ISBN எண் இல்லாமல் புத்தகங்களை பதிப்பித்து காப்புரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இணையதளங்கள் மற்றும் ChatGPT போன்ற செயலிகளில் இருந்து தகவல்களை எடுத்து, கற்பனையான எழுத்தாளர் பெயர்களில் தரமற்ற புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற பொது நூலகங்களுக்கும் இவ்விரு நிறுவனங்களும் தகுதியற்ற புத்தகங்களை விநியோகித்ததன் மூலம் ரூ.1,74,01,162 (ரூ.1.74 கோடி) அரசு நிதி வழங்கப்பட்டுள்ளது. பிற பதிப்பகங்களும் இதுபோன்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் இந்த கூட்டு திருட்டுக்கு உதவிய அதிகாரிகள் யார் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DVAC Arrests 'Agal Vilakku' Publisher Mohan Over Rs 1.74 Crore Tamil Nadu Library Book Scam
5 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்! தமிழக அரசின் நடவடிக்கையால் பரபரப்பு... அடுத்தது யார்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.