

SIR மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்ததாம் செய்யப்படும் SIR முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது தடுக்க வேண்டும் உட்பட 10 கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவில் “இந்தியா கூட்டணியை” சேர்ந்த 10 தலைவர்களும் இணை மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் M. A. பேபி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் D. ராஜா உட்பட 10 தலைவர்கள் இணை மனுதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய்யின் பெயர் அந்த பட்டியலில் இல்லை. தவெக தங்களது கொள்கை எதிரி என்று பாஜகவை சொல்லும் நிலையில் மத்திய அரசை நோக்கி எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை எனும் விமர்சனம் எதிர்கட்சிகளால் தொடர்ந்து வைக்கப்படுகிறது. நீட்-க்கு எதிரான போராட்டம் முதல் தற்போது நடக்கும் ஞானேஷ்குமார் பதிவு விலக கோரி நடக்கும் போராட்டம் வரை விஜய் பெரிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக எந்த கண்டனமும் எழுப்பவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ராகுல் காந்தி மனுவை குறிப்பிட்டு, இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “சாதாரணமாக பேசும் போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தரேன் சாப்பிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள், அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல.
பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?
காங்கிரஸ் உள்ளிட்ட துரோகிகள் கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் கழகத்தின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கி இல்லாத டம்மிபீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரெட்' டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.